தவத்திற்கு அட்டாளைச்சேனை மக்கள் நன்றி தெரிவிப்பு - தமீம் ஆப்தீன்


AL .றமீஸ்
அட்டாளைச்சேனையையும் அக்கரைப்பற்றையும் பிரித்து அரசியல் செய்யும் அதாஉல்லாவின் சிந்தனையிலிருந்து மாறுபட்டு இரண்டு ஊர்களையும் இணைக்க வேண்டுமென்று பாடுபடும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவத்தை அட்டாளைச்சேனை மக்கள் பாராட்டாமல் இருக்க முடியாது என்றார் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினர் தமீம் ஆப்தீன்
கம்ரெலிய திட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை அவர் தெரிவித்தார்.
தமீம் ஆப்தீன் தொடர்ந்து உரையாற்றுகையில்
நூறு வீதமான அக்கரைப்பற்று மக்கள் சேகு இஸ்ஸதீனுக்கு ஆதரவாக செயற்பட்டுவந்த வேளையில் அட்டாளைச்சேனை மக்கள் அதாஉல்லாவுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தார்கள். அவர் வெற்றி பெற்று வீதி அபிவிருத்தி அமைச்சராக இருந்த போது அக்கரைப்பற்று சந்தையிலிருந்து தைக்காநகர் மையவாடி வரை பிரதான வீதியை காபெட் வீதியாக மாற்றினார்.அதன் பிற்பாடு அட்டாளைச்சேனையையும் அக்கரைப்பற்றையும் பிரிக்கின்ற நுழை வாயிலை அமைத்தார்.அதே போல் அதி நவீன மின் விளக்குகளை அக்கரைப்பற்றின் பிரதான வீதியில் மாத்திரம் அமைத்தார். இப்படியாக அக்கரைப்பற்றையும் அட்டாளைச்சேனையையும் பிரித்துப் பார்க்கின்ற மனநிலையிலே முன்னாள் அமைச்சர் அதாஉல்லா இருந்து வந்துள்ளார்.
இப்படியான நிலையிலே அக்கரைப்பற்றைச் சேர்ந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தவம் அவர்கள் எந்தவொரு வேலைத்திட்டமாகயிருந்தாலும் அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்தவர்களையும் இணைத்து செயற்படுகின்றார்.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு புதிய அபிவிருத்தி குழு உறுப்பினர்களை தவம் அவர்கள் நியமித்துள்ளார். அக் குழுவில் பாலமுனையைச் சேர்ந்த சட்டத்தரணி ஹனிபா அவர்களையும் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த என்னையும் நியமித்துள்ளார்.அதே போல் அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதான அபிவிருத்தி குழுவில் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த துறை சார்ந்த பல பேரை உள்வாங்கியுள்ளார்.
கடந்த முறை அதாஉல்லாவின் கட்சி சார்பாக நான் பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று பிரதேச சபை உறுப்பினராக பதவி வகித்தேன். அதாஉல்லாவின் பிரதேச வாத செயற்பாடுக்ள் மற்றும் அட்டாளைச்சேனைக்கு எதிராக அவர் செயற்படும் விதம் என்பன காரணமாக நான் பிரதேச சபை உறுப்பினர் பதியை இராஜீனமா செய்து கொள்ளும் அளவிற்கு சென்றது.
ஆனால் அதாஉல்லாவுக்கு எதிர்மாறாக கல்வியில் சிறந்து விளங்கக் கூடிய நல்ல சிந்தனையுள்ள பிரதேச வாதத்தை கடந்து செயற்படுகின்ற ஒருத்தர் நம் சமூகத்திற்கு மிகவும் அவசியமாக தேவைப்படுகின்றார்.அப்படி பிரதேச வாதத்தை கடந்து செயற்படுகின்ற ஒருத்தராக நான் தவம் அவர்களை காண்கின்றேன்.
அத்தோடு அட்டாளைச்சேனைக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி கிடைப்பதற்கும் தவம் அவர்கள் பெரும் பங்களிப்பு செய்துள்ளார் என்ற மறைமுக உண்மையையும் இங்கு நான் குறிப்பிட்டே ஆக வேண்டுமென்றார் தமீம் ஆப்தீன்
தவத்திற்கு அட்டாளைச்சேனை மக்கள் நன்றி தெரிவிப்பு - தமீம் ஆப்தீன் தவத்திற்கு அட்டாளைச்சேனை மக்கள் நன்றி தெரிவிப்பு -  தமீம் ஆப்தீன் Reviewed by NEWS on September 04, 2018 Rating: 5