வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை


இன்று மற்றும் நாளைய தினங்களில் வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில்  இடியுடன் கூடிய மழைப் பெய்வதற்கான சாத்திய நிலைக்காணப்படுவதுடன், வேகமாக காற்று வீசக்கூடுமெனவும் வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் ஆகிய கடற்கரைப் பிரதேசங்களில், மணிக்கு 50 கிலோமீற்றர் வரை காற்று வீசக்கூடுமென்பதால் பொதுமக்களை மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும் கோரப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...