பௌஸ் ஹாஜியாரின் “அனைவருக்கும் வீடு” திட்டம் மூலம் வீடு அன்பளிப்புஅல்ஹாஜ் M.L.M Fouz அவர்களின்  நிதி ஒதுக்கீட்டின் கீழ் “அனைவருக்கும் வீடு” என்ற திட்டத்தின் முதல் கட்டமாக 3 வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு 08.09.2018 அன்று திக்வெல்லையில் இடம்பெற்றது.
மெல்பன் நிறுவனம் மற்றும் Fauz Trust நிறுவனத்தலைவர் அல்ஹாஜ் M.L.M Fouz அவர்களின்  நிதி ஒதுக்கீட்டின் கீழ் “அனைவருக்கும் வீடு” என்ற திட்டத்தின் முதல் கட்டமாக இவ்வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது. இத்திட்டத்தின் இரண்டாம் கட்டமாக 4 வீடுகள் வறிய  குடும்பங்களுக்கு வழங்கவுள்ளத்துடன்.  மேலும்  வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் ஹம்பந்தோட்டை பாதகிரியில் அமைக்கப்படுகின்ற மாதிரிக் கிராமத்தில் 47 வீடுகளுக்கு கூரை மற்றும் மின்சார வசதியும்   வழங்கவுள்ளார்.
OSTEM நிறுவனத் தலைவர் அல்ஹாஜ் நஸார் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்பிரதமஅதிதியாக பைத்துல்மால் பொருளாளர்   அல்ஹாஜ் M.Z.F. Haq கலந்து கொண்டார். மேலும் அதிதிகளாகமெல்பன் நிறுவனம் மற்றும் Fauz Trust நிறுவனத்தலைவர் அல்ஹாஜ் M.L.M Fouz, அல்ஹாஜ் Ifham, அல்ஹாஜ் Nisathar மற்றும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
Fauz Trust நிறுவனத்தின் கல்வி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இனமத பேதமின்றி மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்ட 1000பாடசாலை மாணவர்களுக்கான 3500.00 பெறுமதியான கற்றல்உபகரணத்துடன் புத்தகப்பை இம்முறை டிசம்பரில் வழங்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...