தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Sep 10, 2018

தவத்தின் மாடு வளர்க்கும் யோசைனயும் புதிய எதிர்கால சிந்தனையும்அக்கரைப்பற்றின் வேளான்மை விவசாயத்தைப் பொறுத்தவரை கடந்த 03 பெரும்போகங்களும் (மாரிப்போகம்) 02 சிறு போகங்களும் (இடைப்போகம்) நமக்கு கைகொடுக்கவில்லை. அதனால், அக்கரைப்பற்றின் மொத்த பொருளாதாரமும் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. பெரும் பஞ்சம் கண்ணுக்குப் புலப்படாமல் நின்றாடுகிறது.
இதற்கு பிரதானமான காரணமாக இருக்கின்ற விடயம் நீர். மழை வீழ்ச்சி குறைவடைந்துள்ளதால் பெரும்போகங்களின் இறுதியில் மழை பெய்யாமையால், செய்த பயிரை இடைநடுவில் கைவிட்டு வரவேண்டிய நிலையும் - சிறு போகங்களின் போது நீர் தட்டுப்பாட்டினால் வரையறுக்கப்பட்ட பிரதேசங்களில் மட்டும் விவசாயம் செய்ய வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் மழை வீழ்ச்சியைப் பொறுத்தவரை அன்மையில் ஏற்பட்டுள்ள மாற்றம், கிட்டிய காலத்தில் சீராகும் நிலவரம் இருப்பதாக தோன்றவில்லை என அவதானங்கள் முன்வைக்கப்படுகின்றன (அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்).
இந்நிலை தொடருமாக இருந்தால், அக்கரைப்பற்றின் விவசாயத்தில் மாற்றங்களைச் செய்ய வேண்டிய கட்டாயம் நம்மை வந்தடைந்துள்ளதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அந்தவகையில் இரண்டு வழிமுறைகளை நாம் கையாள வேண்டும்.
01) நீர் பெறும் வழிமுறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும்:-
- இதில் விவசாயக்கிணறு அமைத்தல்
- குழாய்க்கிணறு அமைத்தல்
02) வேளான்மை விவசாயத்தோடு சேர்ந்ததாக மாற்று விவசாயத்தையும் செய்ய நாம் முன்வர வேண்டும்:-
- மேட்டுப்பயிர் செய்தல் - பயறு, கௌபி, முறுங்கை, பீக்கை, மிளகாய் போன்றவை.
- விலங்கு வேளான்மை செய்தல் - மாடு, ஆடு, முயல், கோழி, வாத்து, அன்னம் போன்றவை. (ஒரு பகுதியில் தேவையான புல்லை வளர்த்துக்கொள்ளலாம்)
இவற்றை மொத்தமான காணியிலும் செய்ய வேண்டியதில்லை. 1/4 பங்கில் இவற்றைச் செய்துகொண்டு, மீதியில் வேளாண்மை விவசாயத்தை செய்துகொள்ளலாம். இதனால் நீரின் தேவை குறைவடைந்து பரவலாக விவசாயம் செய்ய வழி கிடைப்பதோடு, நீர் தட்டுப்பாட்டினால் வேளான்மை செய்ய முடியாமல் ஏற்படும் வருமான இழப்பையும் ஈடுசெய்ய முடியும்.
இதற்கு நாம் தயாராக வேண்டும். வேளாண்மை விவசாயத்தில் மட்டும் தங்கி இருக்க முடியாது. வேளாண்மை விவசாயத்திற்கு தொழில்நுட்பரீதிலான பங்களிப்பு அரச நிறுவனங்களிடமிருந்தோ தனியார் நிறுவனங்களிடமிருந்தோ பாரியளவில் வழங்கப்படுவதில்லை. உற்பத்தி செய்பவரை விட இடைத்தரகர்களே அதிகம் பலன்பெறும் ஒரு நிலையையும் நாம் அவதானிக்கலாம்.
எனவே நாம் மாறவேண்டுமென்ற அலார்ம் நமக்கு கிடைத்தும் நாம் மாறாமல் இருக்க முடியாது. இம்மாற்றத்திற்கு வழிதிறப்பது என்பது மனநிலையிலே தங்கியுள்ளது. இது சவாலான விடயம்தான். ஆனாலும் சாதாரணமாக தட்டிவிட முடியாது என்பதே எனது கணிப்பு.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages