அடுத்தாண்டிலாவது மோட்டார் சைக்கிள் வழங்குக - கே.எம்.கபீர் கோரிக்கைஎம்.எஸ்.எம். ஹனீபா
வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு இதுவரையில் வழங்கப்படாமல் இழுத்தடிப்புச் செய்யப்படும் மோட்டார் சைக்கிளை, அடுத்தாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் மூலமாகவேனும் பெற்றுக்கொடுத்து, அவர்களின் போக்குவரத்துப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டுமென, அம்பாறை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கத்தின் தலைவர் கே.எம்.கபீர், அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மோட்டார் சைக்கிள்கள் முன்னைய காலத்தில் வழங்கப்படுவதில் யார் யாருக்கெல்லாம் பாரபட்சம் காட்டப்பட்டதோடு, அவர்களுக்கெல்லாம் மோட்டார் சைக்கிள் வழங்கப்படுமென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்திருந்த போதிலும், அது இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என, அவர் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்