முஸ்லிம் வாலிபர்களின் முயற்சியில் SMARTMOBILE பொது அறிவுப் போட்டிபொது அறிவுத்திறனை விருத்தி செய்வதற்காக Mbnsoft Technology நிறுவனத்தினால் அண்மையில் தயாரித்து வெளியிடப்பட்ட Multi Knowledge மென்பொருள் மூலம் திறந்த அறிவுப் போட்டி ஒன்று நடாத்தப்படுகின்றது.
போட்டியில்  வயது வித்தியாசமின்றி அனைவரும் பங்குபற்ற முடியும். இப் போட்டியில் பங்குபற்றுவதன் மூலம் தேடல் அறிவைப் பெறுவதுடன் வினாக்களுக்கு விடையளிக்க முற்படும்போது பலநூறு விடயங்களை எம்மால் இலகுவாக கற்றுவிடமுடியும்.
இது தொடர்பாக அந்நிறுவனத்தின் பணிப்பாளரிடம் வினவிய போது;
இது எமது நான்காவது போட்டியாகும். இதுவரை நடாத்தப்பட்ட போட்டிகளில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது. 
ஆனால் இம்முறை நடைபெறும் போட்டி சற்று வித்தியாசமான முறையில் ஸ்மார்ட் தொலைபேசிகளினூடாக நடைபெறுகின்றன. 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...