புகையிரதம் தடம் புரண்டதால் 17 பேர் பலி - 100 பேர் காயம்

வடகிழக்குத் தாய்வானில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியதில் 17 பேர் வரை உயிரிழந்துள்ளனர். 

புயுமா எக்ஸ்பிரஸ் என்ற தாய்வான் புகையிரதம் ஒன்றே இவ்வாறு தடம் புரண்டு விபத்துக்கு உள்ளாகியுள்ளது. 

குறித்த விபத்தில் ஸ்தலத்திலேயே 17 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன் 100 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். 

புயுமா எக்ஸ்பிரஸ் புகையிரதமானது டொங்ஷான் நகரத்திலிருந்து சுஷின் நகரத்திற்கு இடையில் பயணிக்கும் புகையிரதம் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

விபத்துக்குள்ளான புகையிரதத்தில் மேலும் 30-40 வரையான பயணிகள் சிக்குண்டு இருப்பதாகவும் அவர்களை மீட்கும் பணியில் மீட்புப்பணியாளர்கள் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...