திருமலை பொது வைத்தியசாலைக்கு 25 தாதிமார்கள் நியமனம்

திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு 25 தாதியர்களை நியமிப்பதற்கு சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிம் நடவடிக்கை எடுத்துள்ளார்.
பிரதி அமைச்சர் அண்மையில் அந்த வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டபோது அங்கு காணப்படுகின்ற குறைபாடுகள் பற்றி அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அனுஷ்யா ராஜ்மோகனிடம் கேட்டறிந்துகொண்டார்.அந்தக் குறைபாடுகளுல் தாதிமார்களின் தட்டுப்பாடு முக்கியமானதாகக் காணப்பட்டது.
தினமும் அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் அந்த வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காகச் செல்வதாலும் தங்கி இருந்து சிகிச்சை பெறுவதாலும் தாதிமார்கள் அதிகம் தேவைப்படுகின்றனர் என்றும் தற்போது இருக்கின்ற குறைந்த எண்ணிக்கையிலான தாதிமார்களைக் கொண்டு சேவையை வழங்குவது சிரமாக இருக்கின்றது என்றும் பணிப்பாளர் பிரதி அமைச்சரிடம் தெரிவித்தார்.
இந்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்வதாக அப்போது உறுதியளித்த பிரதி அமைச்சர் அதற்கான நடவடிக்கையை இப்போது எடுத்துள்ளார்.
அதன்படி,புதிய ஆட்சேர்ப்பு நடவடிக்கையின்போது 25 தாதிமார்களை திருமலை பொது வைத்தியசாலைக்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யுமாறு பைசல் காசிம் சுகாதார அமைச்சின் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். 
திருமலை பொது வைத்தியசாலைக்கு 25 தாதிமார்கள் நியமனம் திருமலை பொது வைத்தியசாலைக்கு 25 தாதிமார்கள் நியமனம் Reviewed by NEWS on October 18, 2018 Rating: 5