தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Oct 19, 2018

புத்தளம் பிரதேச செயலகம் பாடசாலை மாணவர்களால் முற்றுகைபுத்தளம் சேரக்குளி குப்பைத்திட்டத்திற்கு ‘எதிராக சந்ததி காக்கும் சரித்திர போராட்டத்தின்’ தொடர் சத்தியக்கிரகப் போராட்டம் 21 ஆவது நாளாக இன்று (19/10) இடம்பெற்றுவரும் நிலையில், புத்தளத்தின் பிரபல பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் இப்போராட்டத்தைப் பலப்படுத்தும் வகையில் குப்பைத் திட்டத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்பியவர்களாக புத்தளம் கொழும்பு முகத்திடலில் இடம்பெற்றுவரும் சத்தியக்கிரக கூடாரத்தை வந்தடைந்தனர்.

அங்கிருந்து ஊர்வலமாக புத்தளம் பிரதேச செயலகத்தை நோக்கிச் சென்ற மாணவர்கள் பிரதேச செயலாளர் தமது மகஜரைப் பொறுப்பேற்கும் வரை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டிருந்தனர்.

பிரதேச செயலக அதிகாரிகள் மகஜரை பெற்றுக்கொண்டதன் பின்னர் மாணவர்கள் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.

(அனீன் மஹ்மூத்)
Post Top Ad

Your Ad Spot

Pages