தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Oct 22, 2018

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அடுத்த வருடம் ஜனவரியில் நிதி ஒதுக்கப்படும்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கட்டட வேலைகளை பூரணப்படுத்துவதற்கும் ஏனைய குறைகளை நிவர்த்தி செய்வதற்கும் அடுத்த வருடம் ஜனவரியில் நிதி ஒதுக்கப்படும் என்று சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்துள்ளார்.

அவ்வைத்தியசாலைக்கு மைக்கேல் என்ற தனவந்தர் வழங்கிய வைத்திய உபகரணத்தை ஞாயிற்று கிழமை[ 21.10.2018] வைத்தியசாலை நிர்வாகத்திடம் வழங்கி வைத்தபின் வைத்தியசாலையின் குறை,நிறைகள் பற்றி நிர்வாகத்துடன் கலந்துரையாடியபோது பிரதி அமைச்சர் இவ்வாறு கூறினார்.அவர் அங்கு மேலும் கூறுகையில்;

எனது அமைச்சின் கீழ் இருக்கும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதையிட்டு நான் கவலையடைகின்றேன்.இந்த வைத்தியசாலையின் கட்டட நிர்மாணம் உள்ளிட்ட அணைத்து வேலைத் திட்டங்களையும் முன்னெடுப்பதற்குத் தேவையான நிதி அடுத்த வருடம் ஜனவரியில் ஒதுக்குவேன்.நான் சுகாதார பிரதி அமைச்சராக ஆன உடனேயே இந்த வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகளை என்னிடம் கொண்டு வந்திருந்தால் உடனே நான் தீர்த்து வைத்திருப்பேன்.இந்த வைத்தியசாலையின் முன்னாள் பணிப்பாளர் ஒரே ஒரு தடவைதான் என்னை வந்து சந்தித்து இருக்கின்றார்.அதுகூட,இந்த வைத்தியசாலையில் உள்ள குறைகளைப்பற்றி பேசுவதற்கு அல்ல.வேறு விடயம் பற்றிப் பேசுவதற்கே சந்தித்தார்.

இருந்தும்,முழுமை பெறாமல் நிற்கும் கட்டடத்தை கட்டி முடிப்பதற்கும் ஏனைய குறைகளை நிவர்த்தி செய்வதற்கும் நான் உடனடி நடவடிக்கைளை எடுப்பேன்.இந்த வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பில் மாதாந்தம் நாம் சந்தித்துப் பேசுவதே நல்லது.அதற்கான ஏற்பாடுகளை வைத்தியசாலை நிர்வாகம் செய்ய வேண்டும்.அப்போதுதான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்துக்கொள்ள முடியும்.கிழக்கு மாகாணத்தில் மூன்று வருடங்களுக்குள் மத்திய அரசுக்குக்  கீழ் வருகின்ற வைத்தியசாலைகளைத் தவிர்த்து அணைத்து மாகாண வைத்தியசாலைகளுக்கும் 1500 மில்லியன் ரூபா வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.அடுத்த வருடம் அந்த வேலைத் திட்டங்கள் அனைத்தும் முடிந்துவிடும்.இவற்றுள் பல வேலைத் திட்டங்கள் முடிந்துவிட்டன.-என்றார்.

[பிரதி அமைச்சரின் ஊடகப் பிரிவு]


Post Top Ad

Your Ad Spot

Pages