இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் அமைச்சருமான அர்ஜூன ரணதுங்க தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தினார் என இந்தியாவை சேர்ந்த விமானப்பணிப்பெண்ணொருவர் குற்றம்சாட்டியுள்ளார் என இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
மும்பாயின் ஹோட்டலொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எனினும் இந்த சம்பவம் எப்போது இடம்பெற்றது என்பதை அந்த பெண் வெளியிடவில்லை.
பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து தனது பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.
இந்தியாவிற்கான விஜயமொன்றின் போது மும்பாய் ஹோட்டலில் ரணதுங்க தன்னிடம் முறைகேடான விதத்தில் நடந்துகொண்டார் என அவர் தெரிவித்துள்ளார்.
எனது இடுப்பில் கைவைத்த ரணதுங்க  அநாகரீகமான முறையில் நடந்து கொள்ள தொடங்கினார், நான் அச்சமடைந்தேன் அவரது காலில் உதைத்தேன்  என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான் அர்ஜூன ரணதுங்கவை எச்சரித்தேன், பொலிஸாரிடம் முறையிடுவேன் கடவுச்சீட்டை இரத்துச்செய்வேன் எனவும் தெரிவித்தேன் என இந்திய விமானப்பணிப்பெண் பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.
 நான் அங்கிருந்து ஓடிச்சென்றுஉடனடியாக இது குறித்து ஹோட்டல் பணியாளர்களிடம் முறையிட்டேன் எனினும்; அவர்கள் இதனை பாரதூரமான விடயமாக கருதவில்லை என அந்த பெண் முகப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.
மும்பாயில் உள்ள ஹோட்டல் யுகு சென்டோரில் நானும் எனது சகாக்களும் இந்திய இலங்கை வீரர்களை பார்த்தோம் அவர்களிடம் ஓட்டோகிராப் வாங்க சென்றவேளையே இது இடம்பெற்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share The News

Post A Comment: