இலவச கண் வைத்திய முகாம்

அதாலா பௌன்டேசனின் அனுசரணையுடனும் தேசிய கண்வைத்தியசாலையின் ஒத்துழைப்புடனும்  நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஏற்பாடு செய்திருக்கும் இலவச கண் வைத்திய முகாம் எதிர்வரும் 20.10.2018 சனிக்கிழமை அன்று காத்தான்குடி ஜுமைரா பீச் பலஸில் நடைபெறவுள்ளதாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.

இவ்விசேட கண் வைத்திய முகாமிற்காக தேசிய கண் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி Dr.ILM. றிபாஸ் அவர்களின் தலைமையிலான வைத்திய நிபுணர்கள் அடங்கிய குழுவினர் குறித்த தினம் காத்தான்குடிக்கு வருகை தரவுள்ளனர். 

இவ்வைத்திய முகாமில் சிகிச்சை பெறுவதற்கான கண் நோயாளர்களை தெரிவு செய்யும் பொருட்டு, அவர்களுக்கான விண்ணப்பங்களை வழங்கும் ஏற்பாடுகள்  பூர்த்திசெய்யப்பட்டுள்ள நிலையில் பயனாளிகளிடமிருந்து பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை சேகரிக்கும் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன. இவ்வைத்திய முகாமில் காத்தான்குடி மற்றும் அதனைச்சூழவுள்ள காங்கயனோடை, பாலமுனை, ஒள்ளிக்குளம். மஞ்சந்தொடுவாய் அடங்கலாக ,ஓட்டமாவடி உட்பல பல பிரதேசங்களையும் சேர்ந்த சுமார் 450 கண் நோயாளர்கள் சிகிச்சை பெறவுள்ளனர்.

முற்றிலும் இலவசமாக முன்னெடுக்கப்படவுள்ள இக்கண்சிகிச்சை வைத்திய முகாம் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் சமூக சேவைப்பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


-எம்.பஹ்த் ஜுனைட்
இலவச கண் வைத்திய முகாம் இலவச கண் வைத்திய முகாம் Reviewed by NEWS on October 15, 2018 Rating: 5