தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Oct 12, 2018

"சாட்சியங்கள்" நூல் வெளியீட்டு விழா

சாட்சியங்கள் எனும் நூல் வெளியீட்டு விழா இன்று 12.10.2018 வெள்ளிக்கிழமை பிற்பகள் 3.30 மணிக்கு காத்தான்குடி ஹோட்டல் பீச்வேயில் நடைபெறவுள்ளது.

காத்தான்குடி மீடியா போரத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா தலைமையில் நடைபெறவுள்ள இந்த நூல் வெளியீட்டு விழாவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சிலின் தலைவருமான என்.எம்.அமீன் பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார்.

வீரகேசரி வாரமஞ்சரி பிரதம ஆசிரியர் ஆர்.பிரபாகன், தினகரன் பிரதம ஆசிரியர் கே.குணராசா, வீரகேசரி பிரதம ஆசிரியர் எஸ்.ஸ்ரீகஜன், வசந்தம் தொலைக்காட்சி செய்திப்பிரிவு முகாமையாளர் எம்.எஸ்.முகம்மட் இர்பான் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் ஆர்.சேதுராமன், விடிவெள்ளி பத்திரிகையின் ஆசிரியர் எம்.பி.எம்.பைறூஸ், தமிழ் மிரர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஏ.பி.மதன், மெட்ரோ நியூஸ் செய்தி ஆசிரியர் ஏ.எச்.சித்தீக் காரியப்பர் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பொதுச் செயலாளர் ஸாதிக் ஷிஹான் உட்பட ஊடகவியலாளர்கள் முக்கியஸ்தர்கள் பிரமுகர்கள் உலமாக்கள் அதிகாரிகள் என பலரும் இவ் விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

இந்த நூலின் விமர்சன உரையை வசந்தம் தொலைக்காட்சி செய்திப்பிரிவு முகாமையாளர் எம்.எஸ்.முகம்மட் இர்பான் மற்றும் வெளியீட்டுரையை விடிவெள்ளி பத்திரிகையின் ஆசிரியர் எம்.பி.எம்.பைறூஸ் ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர்.

எனது நூல் வெளியீட்டு விழா தொடர்பான அழைப்பு கிடைக்காத சகோதரர்கள் எனது முக நூல் நண்பர்கள் இதனை அழைப்;பாக ஏற்று கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி
12.10.2018

Post Top Ad

Your Ad Spot

Pages