பாராளுமன்றம் வரை செல்லவுள்ள பொலிஸ் மா அதிபர்

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் செயற்பாடுகள் தொடர்பில் சபையில் ஒருநாள் விவாதத்தை கோருவதற்கு பொது எதிரணி தீர்மானித்துள்ளது.

பொது எதிரணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றிரவு நடைபெற்றுள்ளது. இதன்போதே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சட்டத்தையும், ஒழுங்கையும் உரிய வகையில் நடைமுறைப்படுத்தும் உண்மையான நோக்கம் அரசுக்கு இருக்குமெனில் பொலிஸ்மா அதிபருக்கு எதிராக ஆளுந்தரப்பிலிருந்து பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும். அவ்வாறு கொண்டுவரப்பட்டால் நாம் ஆதரவை வழங்கலாம்" என மஹிந்தவிடம் பொது எதிரணியின் பங்காளிக் கட்சித் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஒருநாள் விவாதத்தை நடத்தினால், இந்த விடயத்தில் அரசின் நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிந்துவிடலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, நாட்டின் பொருளாதார நிலவரம் தொடர்பில் ஆராய்ந்து, பரிந்துரைகளை முன்வைப்பதற்கு குழுவொன்றை அமைப்பதற்கும் இந்த சந்திப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. என பொது எதிரணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களில் ஒருவரான தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...