கிழக்கு மாகாணத்தில், ஆசிரியர்களின் நிரந்தர, தற்காலிக இடமாற்றங்கள் அனைத்தும், டிசெம்பர் மாதம் 31ஆம் திகதி வரைக்கும் இடைநிறுத்தப்பட்டுள்ளனவென, கிழக்கு மாகாண கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

எனினும், சுற்றுநிருபத்துக்கு அமைவாக, மகப்பேற்றுக் காலம் வரையிலான இடமாற்றங்கள் மட்டும் வழங்கப்படுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆளுநர் ரோஹித போகொல்லாகமவின் பணிப்புரைக்கு அமைவாக இடைநிறுத்தப்பட்டுள்ள இந்த இடமாற்றங்கள் குறித்து, கிழக்கு மாகாண கல்வியமைச்சின் அனைத்து இடங்களிலும் விளம்பரப் பதாகைகள் ஒட்டப்பட்டுள்ளன.

Share The News

Post A Comment: