தேசிய வாசிப்பு மாத விழிப்புணர்வு ஊர்வலம்.

தேசிய வாசிப்பு மாதமாகிய ஒக்டோபர் மாதத்தை சிறப்பிக்கும்  வகையில் காத்தான்குடி பொது நூலகத்தினால் "இனங்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கான வாசிப்பு" நூல்களை வாசிப்போம் ! அறிவை வளர்ப்போம்! எனும் தொணிப்பொருளில்  நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் இன்று (18) வாசிப்பு தொடர்பிலான விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றை நடாத்தியதுடன் வாசிப்பின் முக்கியத்துவம் தொடர்பிலான விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களும் பொதுமக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

பொது நூலக உதவியாளர் SLM.முபாறக் தலைமையில் இடம்பெற்ற இவ் வாசிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தில் பொது நூலக நூலகர் ILM.நசீம், காத்தான்குடி நகரசபை செயலாளர் MRF. ரிப்கா, நகர சபை உறுப்பினர் இல்மி அஹமட் லெப்பை,  நகர சபை கணக்காளர் AS.மனாஸிர் , நகர சபை ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள், வாசகர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்..

-எம்.பஹ்த் ஜுனைட்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...