தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Oct 9, 2018

எரிபொருள் விலையில் மீண்டும் திருத்தம்!

விலை சூத்திரத்துக்கு அமைய, இந்த மாதத்துக்கான எரிபொருள் விலைத் திருத்தம் நாளைய தினம் முன்னெடுக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு அமைய எரிபொருள் விலைத் திருத்தத்தை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், எரிபொருள் விலையானது இரண்டு தடவைகள் திருத்தம் செய்யப்பட்டன.
கடந்த மாதம் 10ஆம் திகதி செய்யப்பட்ட எரிபொருள் திருத்தத்துக்கமைய ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 4 ரூபாயாலும் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post Top Ad

Your Ad Spot

Pages