இடைக்கால அரசுக்கு ஆதரவு இல்லை!

இடைக்கால அரசாங்கம் அமைக்கும் முயற்சிகளுக்கு எந்த வகையிலும் ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

மக்கள் ஆணைக்கு புறம்பாக செயற்பாட்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முற்படும் செயற்பாடுகளை ஆதரிக்க முடியாதென தெரிவித்துள்ள அக்கட்சியின் செயலாளர் நிசாம் காரியப்பர் நல்லாட்சி அரசாங்கத்தின் பதவிக்காலம் நிறைவடையும் வரையில் தொடர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...