கால்லேகம, கெகுணகொல்ல "பிறைநிலா" ஊடக வலையமைப்பு ஏற்பாடு செய்திருந்த "செய்தி வாசித்தல்" ஊடகப்பயிற்சிப் பட்டறை அண்மையில் நடைபெற்றது.

நிகழ்வு நாரம்மல, பஹமுனே டொக்டர் ரிஸ்வான் சஹாப்தீன் உயர்கற்கைகள் நிலையத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் வளவாளராக இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி கலந்து கொண்டார். சிறப்பதிதிகளாக டொக்டர் சஹாப்தீன் உயர்கற்கைகள் நிலையத்தின் பணிப்பாளர் அல்ஹாஜ் இஸ்மாயில், மெல்பன் உறுக்குக் கம்பிகள் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி டொக்டர் ரம்ஸி அமானுல்லாஹ், BC Advertising நிறுவனத்தின் பணிப்பாளர் செய்யத் ரஸ்மி மௌலானா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


நிகழ்வுகளை "பிறைநிலா" ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் சப்ராஸ் அபூபக்கர் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Share The News

Post A Comment: