நாட்டில் பொட்டு வைத்தவர்களுக்கும், சேலை அணிந்தவர்களுக்கும் தனியாக தொழிற்படுகின்ற சட்டம் காவியுடை அணிந்தவர்களுக்கு வேறொரு வகையில் செயற்படுகின்றது. நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படக் காரணமாக இருந்த புலிகள் மீண்டும் வரவேண்டும் எனப் பகிரங்கமாகக் கோரிய சேலை அணிந்தவர்களுக்கு வழங்கப்படுகின்ற பிணை நாட்டினதும், சிங்கள பௌத்தர்களினதும் உரிமைகளுக்கான குரல்கொடுத்த கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்படாதது ஏன் என சிங்கள ராவய அமைப்பின் பொதுச்செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் கேள்வி எழுப்பினார்.
ராஜகிரியவில் அமைந்துள்ள பொதுபலசேனா அமைப்பின் அலுவலகத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்

Share The News

Post A Comment: