கொலைத் திட்டம் : நாலக டி சில்வா குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகவில்லை

வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்த பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதி பொலிஸ் மா அதிபரின் பிள்ளை ஒருவருக்கு ஏற்பட்டுள்ள சுகயீனம் காரணமாக குற்றப்புலானய்வு பிரிவில் இன்று ஆஜராக முடியவில்லை என அவர் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன அல்விஸ் ஆகியோரை கொலை செய்ய திட்டம் தீட்டியமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு ஒன்றிற்கு அமைவாக குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர்கள் உள்ளிட்ட பலரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
கொலைத் திட்டம் : நாலக டி சில்வா குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகவில்லை  கொலைத் திட்டம் : நாலக டி சில்வா குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகவில்லை Reviewed by NEWS on October 16, 2018 Rating: 5