அட்டாளைச்சேனை, ஒலுவில் துறைமுகத்தினை மீனவர்கள் பயன்படுத்த முடியாதவாறு மண் மூடியதால் அதை உடனடியாக சீர் செய்து தருமாறு மீனவர்கள் நீண்ட நாள் கோரியும் எவ்வித முன்னேற்பாடுகளும் இல்லை என கோரி இன்று (02) அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்கு முன்னாள் மீனவர்கள் தங்களது  படகுகளை பிரதான வீதியில் வைத்து மறியல் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர். 

இது சம்மந்தமாக அரசியல் வாதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியும், சில அரசியல்வாதிகள் இரட்டை வேடம் போட்டு ஊர் வாதங்களை மேற்கொள்ள வேண்டாம் எனவும் கோரி மீனவர்கள் போராட்டத்தினை நடத்தி வருகின்றனர். 

இதேவேளை மறுபுறம் ஒலுவில் ஊர் அழிந்துபோவதாக கூறி ஒலுவில் மக்கள் 3 வது நாளாக போராட்டத்தை முன்னெடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது. 

சிலோன் முஸ்லிம் அட்டாளைச்சேனை செய்தியாளர்கள் 


 

Share The News

Post A Comment: