கல்முனை வர்த்தகர்கள் எதிர்நோக்கி வரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறும், வர்த்தக சேவைக்கான உட்கட்டமைப்பு வசதியை ஏற்படுத்தித் தருமாறும் கோரி  கல்முனை மாநகர முதல்வரிடம் கல்முனை வர்த்தக சங்கம் இன்று மகஜர் கையளித்துள்ளது.

கல்முனை வர்த்தக சங்கத்திற்கும் கல்முனை முதல்வர் சட்டத்தரணி ஏ. எம் .ரகீபிற்கும் இடையிலான சந்திப்பு மாநகர முதல்வர்அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது வர்த்தகர்கள் எதிர்நோக்கி வரும் சவால்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களின்  நலன்கருதி உட்கட்டமைப்பு பொதுவசதிகளை ஏற்படுத்துதல் மற்றும் மக்கள் நல செயற்பாடுகை விரைவுபடுத்துமாறும் வேண்டியதுடன் தமது கோரிக்கைகள்உள்ளடங்கிய மகஜரையும் முதல்வரிடம் கையளித்தனர்.
இச் சந்திப்பில் பல விடயங்கள் கடலந்துரையாடப்பட்டதுடன் சாத்தியமான வழிகளில் விரைவாக தீர்வினை பெற்றுத் தருவதற்கு எடுக்கை எடுப்பதாக வர்த்தக சமூக பிரதிநிதிகளிடம் கல்முனை முதல்வர் ஏ.எம்.ரகீப் வாக்குறுதி அளித்தமையும் குறிப்பிடத்தகக்கது.

Share

Share The News

Post A Comment:

Back To Top