வடமேல் மாகாணசபையின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகின்ற நிலையில், மாகாணசபையின் அதிகாரங்கள் ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இதனை தவிர மேலும் நான்கு மாகாணசபைகளின் பதவிக்காலம் ஏற்கனவே முடிவடைந்துள்ளன. மத்திய மாகாண சபையின் பதவிக்காலம் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது.

ப்ரகமுவ, வடமத்திய, கிழக்கு மாகாணங்களின் பதவிக்காலம் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் முடிவடைந்தது. இந்தநிலையில் குறித்த மாகாணசபைகளின் அதிகாரங்கள் ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, வட மாகாணசபையின் பதவிக்காலம் எதிர்வரும் 25ஆம் திகதியுடன் முடிவடைய உள்ளது. ஏனைய மூன்று மாகாணசபைகளின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிகிறது.தென் மாகாணசபையின் பதவிக்காலம் ஏப்ரல் 10ஆம் திகதியும் மேல் மாகாணசபையின் பதவிக்காலம் ஏப்ரல் 21ஆம் திகதியும் முடிவடைய உள்ளன. ஊவா மாகாணசபையின் பதவிக்காலம் அடுத்த வருடம் செப்டெம்பர் மாதம் முடிவடையவுள்ளது.

Share The News

Post A Comment: