நாட்டில் மீண்டுமொரு இனக்கலவரத்தை ஏற்படுத்துவதற்கு சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பொரளை என்.எம். பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. அதில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

"நாட்டில் மீண்டுமொரு இனக்கலவரத்தை ஏற்படுத்துவதற்கு சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அது குறித்து மக்கள் அவதானத்துடன் இருந்துகொள்ள வேண்டும்.  மேலும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ், முஸ்லிம் உறுப்பினர்கள் உட்பட அனைவரினதும் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும். 

அத்துடன் அழுத்கம கலவரம் தொடர்பில் உடனடியாக ஆணைக்குழு அமைத்து சுயாதீன விசாரணை மேற்கொள்ள வேண்டும்." என கூட்டு எதிர்க்கட்சி அரசாங்கத்தைக் கோரியுள்ளதென அவர் மேலும் தெரிவித்தார்.

Share The News

Post A Comment: