ஒலுவில் பல்கலைக்கழக மாணவகர்களை அப்புறப்படுத்த பொலிஸார் களத்தில்!தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் தங்கியுள்ள மாணவர்கள் அங்கிருந்து அகன்று செல்லவிட்டால், அவர்களுக்கு எதிராக பொலிஸாரின் ஒத்துழைப்புடன் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படுமென, உயர் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

குழப்பம் விளைவிக்கும் வகையில் செயற்படுவதுடன், பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கட்டடத்தில் சட்டரீதியாக தங்கியிருக்கும் மாணவர்கள், பெற்றோர் உடனடியாக பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து செல்லுமாறு, ​அக்கறைப்பற்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அம்பாறை- ஒலுவில் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் தொழிநுட்ப பீட மாணவர்கள் நேற்றைய தினம் வரை நிர்வாக கட்டடத்தை முழுமையாக கையகப்படுத்தியிருந்தனர்.

தொழிநுட்ப பீட மாணவர்கள் நால்வரின் புலமைப்பரிசில் இடைநிறுத்தம் மற்றும் 21 மாணவர்களுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள வகுப்புத் தடை​க்கு எதிராகவே குறித்த பல்கலைக்கழகத்தின் தொழிநுட்ப பீட மாணவர்கள் நிர்வாக கட்டடத்தை கையகப்படுத்தி அங்கு தங்கியுள்ளனர்.

இதேவேளை இதுதொடர்பில், உப பீடாதிபதியுடன் குறித்த மாணவர்களின் பெற்​றோர் கலந்துரையாடலை முன்னெடுத்த பின்னர் மாணவர்களின் பெற்றோரும் குறித்த கட்டடத் தொகுதியில் சத்தியாகிரகப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
ஒலுவில் பல்கலைக்கழக மாணவகர்களை அப்புறப்படுத்த பொலிஸார் களத்தில்! ஒலுவில் பல்கலைக்கழக மாணவகர்களை அப்புறப்படுத்த பொலிஸார் களத்தில்! Reviewed by NEWS on October 17, 2018 Rating: 5