அமைச்சரவையில் ஜனாதிபதியுடன் மோதிய மங்கள மற்றும் மத்தும பண்டார

இலங்கையில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளமை தொடர்பில் அமைச்சர்கள் மத்தும பண்டாரவும் மங்கள சமரவீரவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கடுமையான விவாதத்தில் ஈடுபட்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன நேற்யை அமைச்சரவை கூட்டத்தின்போதே ஜனாதிபதியுடன் இரு சிரேஸ்ட அமைச்சர்களும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையின் பொலிஸ்மா அதிபரின் திறமையின்மையாலேயே குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன என ஜனாதிபதி குற்றம்சாட்டியதை தொடர்ந்தே அமைச்சர்கள் இருவரும் ஜனாதிபதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இருவரும் ஜனாதிபதியின் கூற்றை நிராகரித்துள்ளதுடன் புள்ளிவிபரங்களை சுட்டிக்காட்டி தற்போது குற்றச்செயல்கள் குறைவடைந்துள்ளன என தெரிவித்துள்ளனர். ஊடகங்களே இதனை பெரிதுபடுத்துகின்றன என தெரிவித்துள்ள அமைச்சர்கள் உண்மையான நிலைமை மிகைப்படுத்தப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளனர்.
   
அமைச்சரவையில் ஜனாதிபதியுடன் மோதிய மங்கள மற்றும் மத்தும பண்டார அமைச்சரவையில் ஜனாதிபதியுடன் மோதிய மங்கள மற்றும் மத்தும பண்டார Reviewed by NEWS on October 03, 2018 Rating: 5