கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தின் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு


சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட சிறுவர் தின நிகழ்வுகள் இன்று(01) பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.

சுமார் 1400 பாடசாலை மாணவர்கள் இங்கு இடம்பெற்ற போட்டி நிகழ்சியில் கலந்து கொண்டதுடன், அவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன.   


அல் அஸ்ஹர் வித்தியாலய அதிபர் ஏ.எச். அலி அக்பர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வுகளில்  ஓய்வுபெற்ற பாடசாலையின் பிரதி அதிபர் எம்.ஐ.எம்.சம்சுதீன் அதிதியாக கலந்து கொண்டதுடன்,   பாடசாலையின் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

-எம்.என் எம்.அப்ராஸ்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...