நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அக்கரைப்பற்று பிராந்தியக் காரியாலயம் சுமார் பத்து வருடங்களாக இயங்கி வரும் நிலையில் இக்காரியாலயத்தின் உத்தியோக பணிகளில் அரைவாசியை சாய்ந்தமருது பிரதேசத்துக்குக் கொண்டு சென்றதைக் கண்டித்து அக்கரைப்பற்று பிரதேச இளைஞர்கள் இன்று சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிரித்தெடுக்கப்பட்ட காரியாலயத்தை மீண்டும் இணைக்கும் வரை தமது போராட்டத்தை நீடிக்கப் போவதாகவூம் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்றிலுள்ள காரியாலயத்தை முழுமையாக சாய்ந்தமருதுக்குக் கொண்டு செல்வதில் தாம் பூரணசம்மதத்தைத் தெரிவிப்பதாகவூம் காரியாலயங்களைப் பிரித்து கிராம மக்களின் ஒற்றுமைக்குப் பங்கம் விளைவிக்க வேண்டாம் என்றும் தெரிவித்து உரிய அமைச்சருக்கு எதிராக இந்த போராட்டத்தை மேகொண்டுள்ளனர். 

Share The News

Post A Comment: