ஜமால் கஷோக்கி கொலையை ஒப்புக்கொண்டது சவூதி அரசு!

இரண்டு வாரங்­க­ளுக்கும் அதி­க­மாக மறு­த­லித்து கருத்துத் தெரி­வித்து வந்த சவூதி அரே­பியா, துருக்­கியின் இஸ்­தான்­பூ­லி­லுள்ள தனது நாட்டுத் துணைத் தூதர­கத்­தினுள் ஊட­க­வி­ய­லாளர் ஜமால் கஷோக்கி கொலை செய்­யப்­பட்­டுள்ளார் என்­பதை கடந்த சனிக்­கி­ழ­மை­யன்று ஏற்­றுக்­கொண்­டுள்­ளது. கடந்த வார இறு­தி­யின்­போது நள்­ளி­ரவில் அரச ஊட­கத்தில் வாசிக்­கப்­பட்ட அறிக்­கை­யொன்றில் கைக­லப்­பின்­போது 59 வய­தான அவர் உயி­ரி­ழந்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

அதி­கா­ர­மிக்க பட்­டத்­திற்­கு­ரிய இள­வ­ரசர் மொஹமட் பின் சல்­மானை கடு­மை­யாக விமர்­சித்­து­வந்த ஊட­க­வி­ய­லாளர் ஜமால் கஷோக்கி காணாமல் போன­தாகத் தெரி­விக்­கப்­படும் கடந்த ஒக்­டோபர் 2 ஆம் திக­தியே துருக்­கியின் இஸ்­தான்­பூ­லி­லுள்ள சவூதி அரே­பிய துணைத் தூதர­கத்­தினுள் இருந்து அவர் வெளி­யே­றி­விட்­ட­தாகத் தெரி­வித்­து­வந்த சவூதி அரே­பியா இவ்­வாறு கஷோக்கி கொலை செய்­யப்­பட்­டுள்ளார் என்­பதை ஏற்­றுக்­கொண்­டமை தெளி­வான குத்­துக்­க­ர­ண­மாகப் பார்க்­கப்­ப­டு­கின்­றது. இது தவிர பெயரை வெளி­யி­டாத துருக்­கிய அதி­கா­ரி­யினால் தெரி­விக்­கப்­பட்ட கஷோக்கி சித்­தி­ர­வதை செய்­யப்­பட்டு கொல்­லப்­பட்­ட­தோடு கட்­டடத்­தினுள் வைத்து துண்டு துண்­டாக வெட்­டப்­பட்டார் என்ற கருத்­தோடும் முரண்­ப­டு­கின்­றது. இந்தக் கொலை தொடர்பில் சவூதி அரே­பி­யாவில் 18 ஆண்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும், மொஹமட் பின் சல்­மானின் உயர்­மட்ட உத­வி­யா­ளர்­கள்கள் இருவர் மற்றும் மூன்று புல­னாய்வு அதி­கா­ரிகள் ஆகியோர் பதவி நீக்கம் செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் சவூதி அரே­பியா தெரி­வித்­துள்­ளது. எவ்­வா­றெ­னினும், றியாத் மீது அதி­க­ரித்­து­வந்த அழுத்­தங்­களை தொடர்ந்து வெளி­யா­கி­யுள்ள இவ்­வொப்­புதல் பொறுப்புக் கூற­லுக்­காக விடுக்­கப்­பட்ட வேண்­டு­கோள்­களின் தீவி­ரத்தை தணிக்க உதவும் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 

 எத­னையும் மூடி மறைப்­ப­தற்கு அனு­ம­திக்­கப்­ப­ட­மாட்­டாது துருக்கி அறி­வித்­ததைத் தொடர்ந்து சவூ­தியின் பொறுப்புக் கூறல் போது­மா­ன­தல்ல என ஜேர்மன் தெரி­வித்­தி­ருந்­தது. அதே­வேளை முழு­மை­யா­னதும் வெளிப்­படைத் தன்­மை­யா­ன­து­மான விசா­ரணை அவ­சியம் என ஐக்­கிய நாடுகள் சபை கோரிக்கை விடுத்­தி­ருந்­தது. இத­னி­டையே கஷோக்கி கொலை­யுடன் தொடர்­பு­பட்ட விட­யங்­களை இல்­லா­ம­லாக்க சவூதி முயற்­சிக்கும் என தாம் அஞ்­சு­வ­தாகத் தெரி­வித்­துள்ள மனித உரிமைக் குழுக்கள், இவ் விசா­ர­ணையில் ஐக்­கிய நாடுகள் சபையும் பங்­கேற்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்­துள்­ளன. 

சவூதி அரே­பி­யாவின் பிர­தான நட்பு நாடான பிரிட்டன் சவூதி அரே­பி­யாவின் அறிக்கை தொடர்­பிலும் அதன் அடுத்த கட்ட நட­வ­டிக்கை தொடர்­பிலும் கரி­சனை கொண்­டுள்­ள­தாக தெரி­வித்­துள்­ளது. மத்­திய கிழக்கில் சவூதி அரே­பி­யாவின் நட்பு நாடு­க­ளான எகிப்து, பஹ்ரைன், ஐக்­கிய அரபு அமீ­ரகம் மற்றும் நாடு­க­டந்த நிலையில் இருக்கும் யெமன் அர­சாங்கம் என்­பன கஷோக்கி தொடர்பில் மன்னர் சல்­மானின் நட­வ­டிக்­கை­களைப் பாராட்­டி­யுள்­ளன. அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால் ட்ரம்பின் விமர்­சனத் தொனி­களின் வேறு­பா­டுகள் மற்­று­மொரு குறிப்­பி­டத்­தக்க விட­ய­மாகக் காணப்­ப­டு­கின்­றது.

வொஷிங்­டனின் அர­சியல் அரங்கில் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்கள் சவூ­தியின் கூற்று தொடர்பில் அவ­நம்­பிக்­கை­யினை வெளி­யிட்­டி­ருந்­த­போ­திலும், கடந்த வெள்­ளிக்­கி­ழமை கருத்து வெளி­யிட்ட அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால் ட்ரம்ப் றியாதின் விளக்கம் நம்­ப­க­மா­னது எனவும் கைதுகள் மேற்­கொள்­ளப்­பட்­டமை முத­லா­வது சிறந்த நட­வ­டிக்கை எனத் தெரி­வித்­தி­ருந்தார். மறுநாள் அவ­ரது கருத்தில் சிறிய மாறு­பாடு காணப்­பட்­டது. சவூதி அரே­பியா இவ் விவ­கா­ரத்தை கையாளும் முறை தனக்கு திருப்­தி­ய­ளிக்­க­வில்லை எனத் தெரி­வித்­த­தோடு றியா­துக்கு அமெ­ரிக்­காவின் பல பில்­லியன் டொலர் ஆயுத விற்­பனை தொடர்­பிலும் வலி­யு­றுத்­தினார். 

கஷோக்­கியின் உடல் எங்கே என்ற கோரிக்கை உள்­ளிட்ட காட்­டு­மி­ராண்­டித்­த­ன­மான செயற்­பா­டுகள் தொடர்பில் வினாக்கள் வலுப்­பெற்­று­வரும் நிலையில் ஒரு­வார கால நெருக்­க­டியைத் தணிப்­ப­தற்­கா­கவும், சவூதி அரே­பிய உயர்­நிலைத் தலை­மைத்­து­வத்தை குறிப்­பாக மொஹமட் பின் சல்­மானை பழி­யி­லி­ருந்து தப்­பிக்க வைப்­ப­தற்­காக சவூதி தரப்பில் 'பலிக்­க­டாக்கள்' தயார் செய்­யப்­பட்­டுள்­ளனர் என ஆய்­வா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர்.

இரண்டு தனிப்­பட்ட விமா­னங்­களில் இஸ்­தன்­பூ­லுக்கு வரு­கை­தந்த 15 பேர் அடங்­கிய கொலை­காரக் கும்­ப­லினால் கஷோக்கி கொல்­லப்­பட்­ட­தாக ஊட­கங்கள் தகவல் வெளி­யிட்­ட­த்தைத் தொடர்ந்து இந்த விட­யத்­துடன் பட்­டத்­திற்­கு­ரிய இள­வ­ரசர் மொஹமட் பின் சல்மான் நெருக்­க­மாக இருப்­பது உண­ரப்­பட்­டது. இந்தப் 15 பேருள் ஒருவர் அனைத்து சந்­தர்ப்­பங்­க­ளிலும் மொஹமட் பின் சல்­மா­னுடன் இருப்­பவர் எனவும் மேலும் இருவர் பட்­டத்­திற்­கு­ரிய இள­வ­ர­சரின் பாது­காப்பு விட­யங்­க­ளுடன் தொடர்­பு­பட்­ட­வர்கள் எனவும் தி நியூயோர்க் டைம்ஸ் தெரி­வித்­தி­ருந்­தது. சவூ­தியின் ஏற்­றுக்­கொள்ளல் என்­பது உண்­மையை வெளிக்­கொ­ண­ரு­வ­தற்­கான செயற்­பா­டாகக் கருத முடி­யாது என வாதிடும் லண்டன் மன்னர் பல்­க­லைக்­க­ழக உதவிப் பேரா­சி­ரியர் அன்ரீஸ் கிரே மறு­த­லிப்­ப­தற்­கான நியா­யங்­களை சவூதி அரே­பி­யா­வுக்கு வழங்­கு­வ­தற்­கான கதை­க­ளையும் உள்­ள­டக்­கி­ய­தாகக் காணப்­ப­டு­கின்­றது எனவும் தெரி­வித்­துள்ளார்.

கஷோக்கி காணாமல் போன­தி­லி­ருந்து அடை­யா­ளப்­ப­டுத்­திக்­கொள்­ளாத துருக்­கிய அதி­கா­ரிகள் சிறுகச் சிறுக அவர் கொல்­லப்­பட்ட தக­வல்­களை வெளி­யிட்டு வந்­தனர் சில தக­வல்கள் தெளி­வா­ன­வை­யாக இருந்­த­தோடு சில தக­வல்கள் கொடூ­ர­மா­ன­வை­யா­கவும் இருந்­தன. அல் ஜெஸீ­ரா­விடம் பேசிய தன்னை அடை­யா­ளப்­ப­டுத்­திக்­கொள்ள விரும்­பாத துருக்­கிய அதி­காரி துணைத் தூத­ர­கத்­தினுள் வைத்து கஷோக்கி கொல்­லப்­பட்­டமை தொடர்பில் 11 நிமிட ஒலிப்­ப­திவு துருக்­கிய அதி­கா­ரி­க­ளிடம் இருந்­த­தாக அவர் தெரி­வித்தார். கொலை­யா­ளிகள் ஊட­க­வி­ய­லா­ளரைக் கொல்­வ­தற்கு முன்னர் விசா­ர­ணை­யின்­போது அவ­ரது விரல்­களைத் துண்­டித்­த­தா­கவும் பின்னர் அவ­ரது தலையைத் துண்­டித்­த­தோடு உட­லையும் துண்டு துண்­டாக வெட்­டி­ய­தா­கவும் அந்த ஒலிப்­ப­தி­வினை மேற்­கோள்­காட்டி கடந்த வாரம் துருக்கிய அரச சார்பு செய்திப் பத்திரிகையான யெயினி சபாக் தகவல் வெளியிட்டது. அவ்வாறு ஆதாரங்கள் எதுவும் இருந்தால் அதனை வெளியிடுமாறு ட்ரம்ப் துருக்கியிடம் கோரியுள்ளார்.

இவ்வாறு விடயங்களை கசிந்தமையே சவூதி அரேபியா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டமைக்கான காரணமாகும் என பகுப்பாய்வாளரான தோஹா நிறுவகத்தின் முரண்பாடு மற்றும் மனிதாபிமான கற்கை நிலையத்தின் பணிப்பாளர் சுல்தான் பரகத் தெரிவித்தார். சவூதி அரேபியா தற்போது பலிக்கடாக்களை தயார் செய்துள்ளது. துருக்கி சரியான ஆதாரங்களை வெளியிடுமானால் சவூதி மன்னர் சல்மானினால் பட்டத்திற்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மானுக்கு தொடர்ச்சியாக ஆதரவாக இருக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
ஜமால் கஷோக்கி கொலையை ஒப்புக்கொண்டது சவூதி அரசு! ஜமால் கஷோக்கி கொலையை ஒப்புக்கொண்டது சவூதி அரசு! Reviewed by NEWS on October 22, 2018 Rating: 5