புதிய அமைச்சரவைக்கு வாய்ப்பு - மகிந்த, மைத்திரி அதிரடி

புதிய பிரதமராக நியமனம் பெற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான விஷேட கூட்டம் ஒன்று தற்போது கொழும்பில் இடம்பெறுவதாக தெரியவந்துள்ளது. 

நாளைய தினம் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாளை மறுதினம் (29) அமைச்சுக்களின் புதிய செயலாளர்கள் மற்றும் பிரதமரின் செயலாளர் நியமிக்கப்பட உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 

எவ்வாறாயினும் கொழும்பில் பல்வேறு இடங்களில் தற்போது பல கூட்டங்கள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக தெரிய முடிகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...