வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு, ஏனைய மாகாண முதலமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை போன்று, தீர்வையற்ற வாகனம் வழங்கப்பட வேண்டும் என்று, அமைச்சர் பைஸர் முஸ்தபாவால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தை, அமைச்சரவை நிராகரித்துள்ளதென அறியமுடிகிறது.
ஏனைய மாகாண முதலமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட தீர்வையற்ற வாகன சலுகையைவிடக் குறைவான சலுகை வழங்கப்பட்டதால், அதை ஏற்பதற்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மறுப்புத் தெரிவித்திருந்தார்.
இதிலுள்ள நியாயத்தை உணர்ந்துகொண்ட அமைச்சர் பைஸர் முஸ்தபா, அனைத்து மாகாண முதலமைச்சர்களுக்கும் வழங்கப்பட்ட சலுகை போன்றே, வடமாகாண முதலமைச்சருக்கும் வாகன சலுகை வழங்கப்படவேண்டும் என்ற அமைச்சரவைப் பத்திரத்தை முன்வைத்திருந்தார்.
இந்தக் கோரிக்கையை அமைச்சரவை ஏற்றுக்கொண்டபோதிலும், நிதியமைச்சர் மங்கள சமரவீர, வாகனக் கொள்வனவு தொடர்பான தன்னுடைய அறிக்கையை மீறும் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கருத்தை வலியுறுத்தியுள்ளார்.
அமைச்சர் மங்களவின் இந்த எதிர்ப்பையடுத்து, வடமாகாண முதலமைச்சருக்கான தீர்வையற்ற வாகனக் கோரிக்கையை, அமைச்சரவை நிராகரித்ததென அறியமுடிகிறது.

Share The News

Post A Comment: