“ரோ” கீழ்த்தரமான செயலில் ஈடுபட மாட்டாது - சரத் பொன்சேகா

உலகில் உயர்ந்த ஒழுக்கவியல் பண்புகளுடன் செயற்பட்டு வரும் ஒர் அமைப்பே இந்தியாவின் உளவுப் பிரிவான “ரோ” எனவும், அது இன்னுமொரு நாட்டின் அரசியல் தலைவர்களை கொலை செய்யும் அளவுக்கு கீழ்த்தரமான செயலில் ஈடுபட மாட்டாது எனவும் முன்னாள் இராணுவத் தளபதியும், அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

களனிப் பிரதேசத்தில் நேற்று (21) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.

எம்முடைய சில உளவுப் படைகள் மோசமான பணிகளிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர். வெள்ளை வேன் கடத்தல், கப்பம் என பல தரப்பட்ட செயல்களிலும் அவர்கள் செயற்பட்டு வருகின்றனர் எனவும் அமைச்சர் பொன்சேகா மேலும் குறிப்பிட்டார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...