ஞானசார தேரரின் விடுதலைக்கு, மியன்மார் உதவியைக்கோரி பொதுபலசேனாபொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் விடுதலைக்கு உதவுமாறு மியன்மார் அரசாங்கத்தின் உதவியைக்கோரி பொதுபலசேனா அமைப்பு, இலங்கைக்கான மியன்மார் தூதுவருக்கு கடிதம் ஒன்றை வழங்கியுள்ளது.

ஞானசார தேரர் கைது செய்யப்பட்டமையின் பின்னணியில் அரசியல்சார் நிகழ்ச்சி நிரலொன்று உள்ளது. மியன்மார் ஒரு பௌத்த நாடு என்ற வகையில் நாட்டின் பௌத்த மதத்திற்கு எதிராகவும், பௌத்தர்களுக்கு எதிராகவும் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்பதுடன், ஞானசாரரை விடுதலை செய்வது குறித்து மியன்மார் அரசினால் முன்னெடுக்கத்தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞானசார தேரரின் விடுதலைக்கு, மியன்மார் உதவியைக்கோரி பொதுபலசேனா ஞானசார தேரரின் விடுதலைக்கு, மியன்மார் உதவியைக்கோரி பொதுபலசேனா Reviewed by NEWS on October 19, 2018 Rating: 5