காத்தான்குடி பிரதேச முன்பள்ளிகளின் விளையாட்டு விழா

காத்தான்குடி பிரதேச முன்பள்ளிகளின் விளையாட்டு நிகழ்வு அதன் தலைவர் ஊடகவியலாளர்AL.டீன் பைரூஸ் தலைமையில் 07.10.2018 ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது..

காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள ஒன்பது முன்பள்ளி மாணவர்கள் பங்குபற்றிய இந் நிகழ்வுக்கு பெருந்தெருக்கள் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் மாணவர்களுக்கான பரிசில்களையும் வழங்கி வைத்தார்.முன்பள்ளி மாணவர்களின் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி நிகழ்வுக்கு விஷேட அதிதியாக பிரதேச கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் MACM.பதூர்த்தீன் அவர்கள் கலந்து கொண்டதுடன் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள், உலமாக்கள், சமூக ஆர்வலர்கள் என பல துறை சார்ந்தவர்களும் கலந்துகொண்டனர்.


(எம்.பஹ்த் ஜுனைட்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...