கிழக்கு மாகாணத்தில் இடமாற்றங்கள் இரத்து!

கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர்களின் நிரந்தர மற்றும் தற்காலிக இட மாற்றங்கள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் மாகாண பணிப்பாளர் எம் கே எம் மன்சூர் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக இவ்விடமாற்றங்கள் அனைத்தும் டிசம்பர் 31ஆம் திகதி வரைக்கும் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


இதேவளை சுற்றுநிருபத்துக்கு அமைவாக மகப்பேற்று காலம் வரையிலான இடமாற்றங்கள் மட்டும் வழங்கப்படும் எனவும் அவர் மேலும் கூறினார்.


இட மாற்றங்கள் குறித்து கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் அனைத்து இடங்களிலும் நேற்றைய தினம் விளம்பரப் பதாகைகள் ஒட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...