Oct 25, 2018

இலங்கை பிஸிலங்கா நிறுவனத்திற்கு இரண்டு சர்வதேச விருதுகள்

ஆசியாவின் முக்கிய வர்த்தக கேந்திரமாகிய சிங்கப்பூரைத் தலைமையகமாக கொண்டு இயங்கும் Shine GoGlobal ஏற்பாட்டில் “சர்வதேச ரீதியில் தொடர்புகளை வலுப்படுத்தி, வியாபார உலகை வெற்றிகொள்வது எவ்வாறு..?” என்பது பற்றிய 3 (october11-13) நாள் செயலமர்வு  மலேசியாவிலுள்ள ஹோட்டல் ஹோம்ஸ் யில் இடம்பெற்றது.

சர்வதேச ரீதியில் பல நாட்டவர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் சாதனையாளர்களை கௌரவித்து விருதுகளும் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில்  இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்டிருந்த, பிஸிலங்கா நிறுவுனரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான இளம் தொழில்முனைவர் K.M.மஸாஹிம் (மஸாகி) அவர்களுக்கு, GoGlobal Business Excellence Award யினை Shine GoGlobal நிறுவுனர் டாக்டர் அஸீஸா ஜலாலுத்தீன் அவர்களாலும், மற்றும் Recognizing Global Endeavors Award யினை Bombay Stock Exchange - SME தலைமை அதிகாரி அஜய் தாகூர் அவர்களாலும் வழங்கப்பட IFPT & Shine GoGlobal மற்றுமொரு நிறுவுனராகிய அய்யப்பா தாஸ் அவர்களால், பொன்னாடையும் போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
இலங்கைக்கு பெருமை சேர்ந்த இவ் விருதினை பெற்ற பிஸிலங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியிடம் இது தொடர்பில் கேட்ட போது,

“பிஸியான இலங்கையர்களை உருவாக்குவதே பிஸிலங்கா நிறுவனத்தின் தூரநோக்கு சிந்தனை..” என குறிப்பிட்டதோடு இவர் நாடெங்கிலும் - தன்னம்பிக்கை, தொழில்வழிகாட்டல் நிகழ்ச்சிகளை அரச தனியார் நிறுவனங்களுடன் இணைந்து நடாத்தி வருகின்றார்.

அத்துடன், பிஸியான இலங்கையர்களை உருவாக்குவதற்கான முதற்கட்டமாக கிழக்கிலங்கையின் தொழில்வாய்ப்பு மற்றும் மனிதவள அபிவிருத்தியைக் கருத்தில்கொண்டு - இறையுதவியுடன், 100 ஊழியர்கள் மூலம் 1000 சுயதொழிலாளர்களை இணைக்கின்ற திட்டமாகிய BusyLanka Project - 2020  என்ற ஐந்தாண்டுகால பரீட்சார்த்த திட்டமொன்றை வகுத்து, அதற்காக சமூக தொழில்முனைவு நிறுவனமான “பிஸிலங்கா” வினை ஆரம்பித்து சிறந்த ஒரு குழுவின் உதவியுடன் வழிநடாத்தி வருகின்றார்.
மேலும், சமூக நலன்கருதி - தான் எடுத்துவரும் முயற்சிகளுக்கு கிடைத்த “உலக அங்கீகாரமாக” திகழும் இவ்விருதினை தன்னைப்போன்று சமூக அக்கறை கொண்ட அத்தனை இலங்கையர்களுக்கும் சமர்ப்பணமாக்குவதாக குறிப்பிட்ட கே.எம்.மஸாஹிம் (மஸாகி) அவர்கள், தனக்கு கிடைத்த சிறந்த அனுபவம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டுமென - Shine GoGlobal - 2019 சர்வதேச வியாபாரத் தொடர்புகளை வலுப்படுத்தும் நெட்வேர்க்கிங் நிகழ்வினை எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் இலங்கையில் நடாத்துவதற்கான ஒழுங்குகளைச் செய்வதற்குரிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இறையுதவியுடன், கைச்சாத்திட்டுள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் சிங்கப்பூர், மலேசியா,இந்தியா, இலங்கை, சீனா உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள பிரபல்யமான தொழிலதிபர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


-எம்.பஹ்த் ஜுனைட்

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network