தவராசாவிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட விக்கி!

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ் வ­ரன், தனக்குக் கிடைத்த செய்­தியை உறு­திப்­ப­டுத்­தா­மல், அதன் உண்­மைத் தன்­மையை ஆராயாமல், எதிர்க்­கட்­சித் தலை­வர் மற்­றும் அமைச்­சர்­க­ளுக்கு அனுப்பியுள்­ளார்.இத­னால் எதிர்க்­கட்­சித் தலை­வர் தவ­ரா­சா­வி­டம் அவர் முறை­யாக வாங்­கிக் கட்­டி­யுள்­ளார்.

இணை­யத்­த­ளத்­தில், வடக்கு மாகாண எதிர்க்­கட்­சித் தலை­வ­ரின் மகன் தொடர்பான செய்தி வெளி­யா­கி­யி­ருந்­தது. அந்­தச் செய்­தியை வடக்கு மாகாண முத­ல­மைச்­சர், வடக்கு மாகாண எதிர்க்­கட்­சித் தலை­வ­ருக்­கும், அமைச்சர்களுக்கும், அவைத் தலை­வ­ருக்­கும் அனுப்பி வைத்­துள்­ளார்.

இது தொடர்­பில் வடக்கு மாகாண எதிர்க்­கட்­சித் தலை­வர் சி.தவ­ராசா, வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ருக்கு மின்­னஞ்­சல் அனுப்­பி­யுள்­ளார்.

அதில் தெரி­வித்­துள்­ள­தா­வது,

யாழ்ப்­பா­ணம் வர்த்­தக நிலை­யத்­தில் திருட்டு, வடக்கு மாகாண சபை முக்­கிய பிர­மு­க­ரின் மக­னும் சிக்­கி­னார் என்ற தலைப்­பில் இணை­யத்­த­ளத்­தில் வெளியான செய்­தியை எனக்­கும் வடக்கு மாகாண அமைச்­சர்­கள், அவைத் தலைவருக்­கும் மின்­னஞ்­ச­லில் அனுப்­பி­ய­தற்கு எனது நன்­றி­கள்.

வடக்கு மாகாண சபை­யின் நிறை­வேற்­றுச் செயற்­பா­டு­க­ளில்­தான் தாங்­கள் திறம்­பட, ஆக்­க­பூர்­வ­மாக விட­யங்­களை விளங்­கிச் செயற்­படாத் தன்மை இருக்­கின்­றது என்று நான் இது­வரை தங்­க­ளைப் புரிந்து கொண்­டேன். ஆனால் அந்த விட­யப் பரப்­புக்­க­ளுக்கு அப்­பா­லும் அதே வடி­வில் தான் செயற்­ப­டு­கி­றீர்­கள் என்­பதை மேற்­ப­டிச் செய்­தியை அனுப்­பி­ய­தன் மூலம் உணர்­கின்­றேன்.தங்­கள் ஊது­கு­ழல் இணை­யத்­த­ளத்­தில் ஒரு செய்­தியை வர­வைத்து அதைப் பரப்பி அர­சி­யல் லாபம் தேடும் தங்­கள் நோக்­கத்­தை­யிட்டு நான் பரி­தாப்­ப­டு­கின்­றேன்.

எனது மக­னுக்கு 26 வயது. அவர் அர­சி­யல் நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­ப­டு­ப­வரோ அல்­லது மாகாண சபை­யில் நான் அங்­கம் வகிப்­ப­தன் மூலம் ஏதா­வது நன்மை பெற்­ற­வரோ அல்­லர். அவ­ரது நட­வ­டிக்­கை­க­ளுக்­கும் எனக்­கும் எந்­தச் சம்பந்தமும் இல்லை. அவர் தனித்­து­வ­மா­ன­வர் என்று கூறி நான் தப்ப எண்­ணு­கின்­றேன் என்று கருதவேண்­டாம். ஒரு­வ­ரின் தனிப்­பட்ட விட­யங்­க­ளையோ அல்­லது அவ­ரின் குடும்ப அங்­கத்­த­வர்­க­ளின் விட­யங்­க­ளையோ அர­சி­யல் ஆதா­யத்­துக்­கா­கப் பயன்­ப­டுத்­து­வது அர­சி­யல் நாக­ரி­கம் அல்ல.அதன் அடிப்­ப­டை­யில்­தான் உங்­கள் குடும்ப விட­யங்­கள் பல­வற்­றை­யும், தங்­க­ளது வீட்­டில் தற்­போது நடக்­கும் விட­யங்­க­ளைப் பலர் எமக்கு எடுத்­துக் கூறி­ய­தோடு, சபை­யில் பேசு­மா­றும் வேண்­டி­ய­போது நான் அவ்­வா­றான அநா­க­ரிக அர­சி­ய­லைச் செய்ய விரும்­பா­மை­யால் அவை பற்­றிப் பேசு­வ­தில்லை. இனி­மே­லும் பேச போவ­து­மில்லை.தங்­கள் ஊது­கு­ழல் இணை­யத்­தில் வெளி­யான விட­யத்­துக்கு வரு­கின்­றேன். அதில் கூறப்­பட்­டுள்ள விட­யங்­களைப் பிழை­யென என்­னால் நிரூ­பிக்க முடி­யும். தனிப்­பட்ட முறை­யில் நிரூ­பிக்­கா­மல் பகி­ரங்­க­மா­கவே நிரூ­பிக்­கத் தயா­ராக உள்­ளேன்.

ஏற்­க­னவே மாகாண சபை­யின் கடந்த 5 ஆண்டு செயற்­பாட்­டில் நடை­பெற்ற ஊழல்­கள், செயற்­பாட்­டுத் திறன்­னின்மை, அதி­கார முறை­கேடு, அசட்­டை­யீ­ன­மான நிறை­வேற்­றுச் செயற்­பா­டு­கள் போன்­ற­வற்றைப் பகி­ரங்­க­மாக விவா­திப்­ப­தற்­கு­ தங்­களை வரு­மாறு பல தட­வை­கள் நான் அழைத்­தி­ருந்­தேன். தாங்­கள் வெளிப்­ப­டைத் தன்­மை­யைப் பேணு­வ­தாகக் கூறு­வது உண்­மை­யா­னால், அதே­போல் தங்­கள் கூற்­றுக்­கள் உண்­மை­யா­ன­தும் நேர்­மை­யா­ன­து­மா­னால், இந்த விட­யம் உள்­ள­டங்­க­ளாக வடக்கு மாகாண சபை­யின் செயற்­பாடு தொடர்­பில் ஒரு பகி­ரங்க விவா­தத்­துக்கு வரவேண்­டும் என்று மீண்­டும் சவால் விடு­கின்­றேன்.அதே­நே­ரம் தாங்­கள் அனுப்­பிய செய்­தி­யைத் திசை திருப்­பு­வ­தாகக் கரு­தி­னால், அந்த விட­யத்தை முத­லில் விவா­தித்து அதன் பின்­னர் ஏனைய விட­யத்­துக்­குள் செல்­ல­வும் நான் முழு­மை­யான சம்­ம­தத்­தைத் தெரி­விக்­கின்­றேன். தங்­க­ளி­ட­மி­ருந்து இதற்கு உறு­தி­யான பதிலை எதிர்­பார்க்­கின்­றேன் – என்­றுள்­ளது.
தவராசாவிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட விக்கி! தவராசாவிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட விக்கி! Reviewed by NEWS on October 08, 2018 Rating: 5