அளுத்­கம கல­வ­ரத்தை ஏற்படுத்தியவர் இப்போதைய அமைச்சரவையில் இருக்கின்றார்!

பேரு­வளை அளுத்­கம கல­வ­ரத்தின் பின்­ன­ணியில் இருந்­த­வர்கள் யார்? ஏன் அந்த இனக்­க­ல­வ­ரத்தை உரு­வாக்­கி­னார்கள் என்­பது இன்று வெளிச்­சத்­துக்கு வந்­துள்­ளது. இந்த கல­வ­ரத்தை ஏற்­ப­டுத்­தி­ய­வர்கள் அது­பற்றி பேசி­ய­வர்கள் எல்­லோரும் இன்று அமைச்சர் பத­வி­களில் இருக்­கி­றார்கள். இது­பற்றி மக்கள் இன்று அறிந்து கொண்­டுள்­ளார்கள் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்தார். இரத்­தி­ன­புரி புதிய நகர் மத்­திய வாசி­க­சாலை கேட்போர் கூடத்தில் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யிலே, அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது, இன்று அர­சாங்கம் நல்­லி­ணக்கம் என்ற போர்­வையில் இனங்­க­ளுக்­கி­டையில் பல்­வேறு வேறு­பா­டு­களை உரு­வாக்கி அரசு குரோ­தங்­களை ஏற்­ப­டுத்தி வரு­கி­றது. நல்­லி­ணக்கம் என்­பது இனங்­க­ளுக்­கி­டையில் பேதங்­களை உரு­வாக்­கு­வ­தாக அமை­யக்­கூ­டாது. அளுத்­கம கல­வ­ரத்தை உரு­வாக்­கி­ய­வர்கள் அந்தச் சம்­ப­வத்தை அர­சாங்­கத்தைக் -கவிழ்ப்­ப­தற்கு சாத­க­மாகப் பயன்­ப­டுத்திக் கொண்­டார்கள்.

இதே­போன்று கண்டி – திகன வன்­மு­றை­களின் பின்­ன­ணியில் இருந்­த­வர்கள் யார் என்­பது இப்­போது தெளி­வா­கி­யுள்­ளது. நாமல் குமார வெளி­யிட்­டுள்ள தக­வல்கள் பல உண்­மை­களை உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளன. ஜனா­தி­பதி கொலை சதி­மு­யற்சி மற்றும் எனது குடும்­பத்­தி­னரை கொலை செய்ய சதி முயற்சி என்­பன தொடர்பில் இந்­தியர் ஒரு­வரும் வாக்­கு­மூலம் அளித்­துள்ளார். சம்­ப­வங்கள் தொடர்பில் எவரும் இது­வரை கைது செய்­யப்­ப­ட­வில்லை. அர­சியல் ப-ழி­வாங்­கல்கள் தொடர்ந்தும் இடம்­பெற்று வரு­கின்­றன. எங்­களைப் பழி­வாங்­கு­வ­தற்கு எப்.சி.ஐ.டி. எனும் சட்­ட­வி­ரோத நிறு-­வனம் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது.

பொய்­யான வழக்­கு­களைத் தாக்கல் செய்­வ­தற்கு இன்று எப்.சி.ஐ.டி. உப­யோ­கப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. எப்.சி.ஐ.டி. இற்கு எதி­ராக தாக்கல் செய்­யப்­பட்ட வழக்­கினை நீதி­மன்றம் இது­வரை விசா­ரிக்­க­வில்லை. முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பர்­ணாந்­துக்கு எதி­ராக எப்.சி.ஐ.டி. இல் வழக்­கொன்று தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. இந்த வழக்கில் சாட்­சி­யா­ளர்கள் பல மாறு­பட்ட வாக்­கு­மூ­லங்­களை வழங்­கி­யுள்­ளார்கள்.

இன்று அமைச்­சர்கள் இலஞ்சம் வாங்­கு­வ­தாக ஜனா­தி­பதி பகி­ரங்­க­மாக தெளி­வாக குற்றம் சுமத்­து­கிறார். இலஞ்ச ஊழல் ஆணைக்­கு­ழு­வுக்கு நாம் முக்­கிய 10பேர் தொடர்பில் முறை­யிட்டோம். அது தொடர்பில் விசா­ரணை இடம்­பெ­ற­வில்லை. இலஞ்ச ஊழல் ஆணைக்­குழு முதியோர் இருக்கும் வயோ­திபர் இல்லம் என்று அமைச்சர் ஒருவர் விமர்­சித்­துள்ளார்.

இன்று இந்த அர­சாங்கம் நாட்டின் வளங்­களை விற்­பனை செய்­துள்­ளது. நாங்கள் எமது ஆட்­சிக்­கா­லத்தில் பெற்ற கடன்­களைக் கொண்டு நாட்டின் அபி­வி­ருத்­தி­களை மேற்­கொண்டோம். அம்­பாந்­தோட்டை துறைமுகத்தை நாம் அமைத்தோம். சர்வதேசத்தின் கவனம் இன்று அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பக்கம் திரும்பியுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணத்தின் பின்பு இலங்கையின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. இன்று அம்பாந்தோட்டை துறைமுகம் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றார்.
அளுத்­கம கல­வ­ரத்தை ஏற்படுத்தியவர் இப்போதைய அமைச்சரவையில் இருக்கின்றார்! அளுத்­கம கல­வ­ரத்தை ஏற்படுத்தியவர் இப்போதைய அமைச்சரவையில் இருக்கின்றார்! Reviewed by NEWS on October 16, 2018 Rating: 5