பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக சில்வா மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவின் நடவடிக்கை பணிப்பாளர் நாமல் குமார ஆகியோரின் சம்பவங்களின் பின்னணியில் இருப்பது யாரென்பதை உடனடியாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு, அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபயவையும் கொல்வதற்கான சதி முயற்சி குறித்து வெளியாகியுள்ள தகவல்களுக்கமைய, நாலக த சில்வா மற்றும் நாமல் குமாரவின் குரல் ஒளிப்பதிவுகள் குற்றவிசாரணைப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டு, அவை அரச இரசாயண பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டதுடன், அதன் அறிக்கைகள் நேற்றைய தினம் கோட்டை நீதவான் நீதமன்றில் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டம், ஒழுங்குகள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

Share The News

Post A Comment: