”ஓய்வு பெறு­வது குறித்து ஆராய்­கின்றேன்” பொலிஸ்மா அதிபர்

ஜனா­தி­ப­தியோ பிர­த­மரோ என்னை பதவி விலகக் கோர­வில்லை. எனினும், அவர்­க­ளது எச்­ச­ரிக்­கை­களை நான் புரிந்­து­கொண்­டுள்ளேன். பொலிஸ்மா அதிபர் என்ற ரீதியில் ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம­ருக்கும் என்­மீது நம்­பிக்­கை­யில்­லை­யெனில் நான் அப்­ப­த­வியில் நீடிப்­பது அர்த்­த­மற்­றது. எனவே ஓய்வு பெறு­வது குறித்து ஆராய்­கின்றேன். எனினும் இன்­று­வரை (நேற்று) இறுதித் திகதி குறித்து தீர்­மா­னிக்­க­வில்லை என்று பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர தெரி­வித்தார்.

பொலிஸ்மா அதிபர் ஓய்­வு­பெறப் போவ­தா­கவும், ஜனா­தி­பதி அவரை ஓய்­வு­பெ­று­மாறு வற்­பு­றுத்­தி­ய­தா­கவும் ஊட­கங்­களில் வெளி­யான செய்­திகள் குறித்து கருத்து தெரி­விக்­கும்­போதே பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர இதனைத் தெரி­வித்தார்.

இது­கு­றித்து அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது, "எல்­லோ­ரி­னதும் தேவை நான் பொலிஸ் மா அதிபர் பத­வி­யி­லி­ருந்து வில­கிச்­செல்ல வேண்­டு­மென்­ப­தானால், நான் இப்­ப­த­வி­யி­லி­ருந்து செல்­வதே முறை­மை­யாக அமையும். 33 வரு­டங்­க­ளாக பொலிஸ் சேவையில் இருக்­கின்றேன். மிக வெளிப்­ப­டை­யாக நான் சேவை­யாற்­றி­யுள்ளேன். இவ்­வா­றான வெளிப்­படை சேவைக்கு கல்­லடி மட்­டுமே தொடர்ந்து கிடைக்­கு­மானால் இதற்கு மேல் இருப்­பதில் அர்த்­த­மில்லை. என்னை நீக்க முடி­யுமா முடி­யாதா என்­றெல்லாம் ஆராய்­கின்­றார்கள். நானாக சென்றால் அப்­பி­ரச்­சினை ஏற்­ப­டா­தல்­லவா? எனவே, நான் பொலிஸில் கட­மை­யாற்­றி­யது போது­மென்று நினைக்­கின்றேன். அதனால் ஓய்­வு­பெ­று­வது குறித்து சிந்­திக்­கின்றேன். இன்னும் இறுதித் திக­தியை முடிவு செய்­ய­வில்லை" என்றார்.

இலங்­கையின் 34 ஆவது பொலிஸ்மா அதி­ப­ராக பூஜித் ஜய­சுந்­தர கடந்த 2016 ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி நிய­மிக்­கப்­பட்டார். அர­சி­ய­ல­மைப்பு பேரவை, மூன்று சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதி­பர்­களின் பெயரை பரி­சீ­லித்து அதி­லி­ருந்து பூஜித் ஜய­சுந்­த­ரவை பொலிஸ்மா அதி­ப­ராகத் தெரி­வு­செய்­தது. 

இந்­நி­லை­யி­லேயே சுயா­தீ­ன­மாக தெரிவு செய்­யப்­பட்ட பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­த­ரவை பதவிவிலக்க பல்வேறு தரப்புகளும் அண்மைக்காலமாக குரல் கொடுத்து வருகின்றன. இந் நிலையிலேயே தற்போது பொலிஸ்மா அதிபர் தானே ஓய்வுபெறுவது குறித்து ஆராய்வதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
”ஓய்வு பெறு­வது குறித்து ஆராய்­கின்றேன்” பொலிஸ்மா அதிபர் ”ஓய்வு பெறு­வது குறித்து ஆராய்­கின்றேன்” பொலிஸ்மா அதிபர் Reviewed by NEWS on October 16, 2018 Rating: 5