அம்பாறை : பாடசாலை காணிகளில் இருந்து இராணுவம் உடனடியாக வெளியேறு!

அம்பாறை மாவட்ட திருக்கோவில் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள பாடசாலைகளின் காணிகளிலிருந்து இராணுவம் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெறும் இல்மனைட் அகழ்வினையும் தடுக்க நடவடிக்கை வேண்டுமென்று ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாராளுமனற் கட்டடத் தொகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற ஜனாதிபதி தலைமையிலான விசேட செயலணிக் கூட்டத்தின்போதே அவர் இந்த வேண்டுகோளை ஜனாதிபதியிடம் விடுத்தார்.

இக் கூட்டத்தில் வடகிழக்கு அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முப்படைகளின் பிரதானிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதன்போது கோடீஸ்வரனின் கோரிக்கையை செவிமடுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இல்மனைட் அகழ்வு விடயம் தொடர்பில் கடலோர சுற்றுச் சூழல் பாதுகாப்பு அதிகாரிகளிடம் வினவியோது அவர்கள் இது தொடர்பாக தமக்கு ஒன்றும் தெரியாது எனத் தெரிவித்தனர். 

இந் நிலையில் ஜனாதிபதி அவர்களிடம் இதனை உடனடியாக தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தெரிவித்துடன் எதிர்வரும் 08 ஆம் திகதி பாராளுமன்ற கோடீஸ்வரின் கோரிக்கைகளுக்கு நல்லதொரு தீர்வை வழங்க எதிர்பார்க்கின்றேன் எனவும் குறிப்பிட்டார்.

அம்பாறை : பாடசாலை காணிகளில் இருந்து இராணுவம் உடனடியாக வெளியேறு! அம்பாறை : பாடசாலை காணிகளில் இருந்து இராணுவம் உடனடியாக வெளியேறு! Reviewed by NEWS on October 04, 2018 Rating: 5