உடனடியாக அமுலுக்கு வரும் வண்ணம், கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளராக மருதமுனை எம்.கே.எம்.மன்சூர், கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவால் நியமிக்கப்ட்டுள்ளார்.

கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய எம்.ரி.அப்துல் நிஸாம், கிழக்கு மாகாணக் கல்வியமைச்சின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே, இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், இன்று (03) தனது கடமையைப் பொறுப்பேற்கின்றார்.

Share The News

Post A Comment: