நிஸாம்தீனுக்கு எதிரான பயங்கரவாத குற்றச்சாட்டு விடுப்பு

பயங்கரவாத குற்றத்தின் கீழ் அவுஸ்திரேலிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்த இலங்கை பிரஜை மொஹம்மட் நிஸாம்தீனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நீக்குவதற்கு அவுஸ்திரேலிய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அவுஸ்திரேலிய பல்கலைக்கழகமொன்றில் படித்துக்கொண்டு அதே பல்கலைக்கழகத்தில் கற்பித்துக்கொண்டிருந்த இலங்கை பிரஜை நிஸாம்தீன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பயங்கரவாத குற்றத்தின் கீழ் அவுஸ்திரேலிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இதேவேளை குறித்த சம்பவத்தினால் நிஸாம்தீனுக்கு ஏற்பட்டுள்ள சட்ட கொடுப்பனவுகள் மற்றும் தண்டப்பணம் என்பவற்றை கோரி மற்றொரு வழக்கை தொடரப்போவதாக நிஸாம்தீனின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
நிஸாம்தீனுக்கு எதிரான பயங்கரவாத குற்றச்சாட்டு விடுப்பு நிஸாம்தீனுக்கு எதிரான பயங்கரவாத குற்றச்சாட்டு விடுப்பு Reviewed by NEWS on October 19, 2018 Rating: 5