மைத்திரி, கோட்டா கொலைச் சதித்திட்டம் - தொடரும் வாக்கு மூலங்கள்!

ஜனாதிபதி கொலைக்கான சதித்திட்டம் தொடர்பாக களுத்துறை பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மாஅதிபர் ரன்மல் கொடிதுவக்குவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலம் பதிவுசெய்துள்ளது.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக கூறப்படும் சம்பவத்தின் தொலைபேசி உரையாடல் தொடர்பாகவே பிரதி காவல்துறை மாஅதிபர் ரன்மல் கொடிதுவக்குவிடம் நேற்று வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதி காவல்துறை மாஅதிபர் மிலந்த ஜயவர்தன, விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியான சிரேஷ்ட காவல்துறை மாஅதிபர் எம்.ஆர். லத்தீவ் ஆகியோரிடமும்,
மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை மாஅதிபர் நந்தன முனசிங்க, எல்பிட்டிய பிராந்தியத்திற்குப் பொறுப்பான காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்தூவ, தங்காலை பிரதி காவல்துறை அத்தியட்சகர் பிரசன்ன அல்விஸ், வரக்காபொல காவல் நிலையப் பொறுப்பதிகாரியான காவல்துறை பரிசோதகர் ஜகாந்த மற்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் சிலரிடமும் இதுவரை வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
மைத்திரி, கோட்டா கொலைச் சதித்திட்டம் - தொடரும் வாக்கு மூலங்கள்! மைத்திரி, கோட்டா கொலைச் சதித்திட்டம் - தொடரும் வாக்கு மூலங்கள்! Reviewed by NEWS on October 02, 2018 Rating: 5