மோட்டார் சைக்கிளில் நாடாளுமன்றம் சென்ற அமைச்சர்

நேற்றைய தினம்(9) நாடாளுமன்ற வீதியில் ஏற்பட்ட வாகன நெரிசல் காரணமாக, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கொட்டும் மழையை​யும் பொருட்படுத்தாது மோட்டார் சைக்கிளில் நாடாளுமன்றத்துக்குச் சென்றுள்ளார்.
நேற்றைய அமர்வின் போது, 3 வாய்மூல ​கேள்விகளுக்கு தான்  பதிலளிக்க வேண்டியிருந்ததால், பல மணி நேரம் வீதியில் காத்துக் கிடந்து இறுதியில் மோட்டார் சைக்கிளில் ஏறி நாடாளுமன்றத்துக்கு வருகைத் தந்ததாகவும், எனவே நாடாளுமன்றம் நடைபெறும் நாட்களில் ஏற்படும் வாகன நெரிசல் குறித்து அவதானம் செலுத்துமாறும் அமைச்சர் அகிலவிராஜ் குறிப்பிட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் நாடாளுமன்றம் சென்ற அமைச்சர் மோட்டார் சைக்கிளில் நாடாளுமன்றம் சென்ற அமைச்சர் Reviewed by NEWS on October 10, 2018 Rating: 5