கிழக்கு மாகாணத்தில் காணி பிரச்சினை தொடர்பில் விசேட கூட்டம்

கிழக்கு மாகாணத்தில் காணி பிரச்சினை தொடர்பில் விசேட கூட்டம் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி செயலணிக்கும், மாகாண ஆளுநருக்குமிடையில் அடுத்த வாரம் சந்திப்பு இடம்பெறும். திருகோணமலை மாவட்டத்தில் புல்மோட்டை, குச்சவெலி, தோப்பூர், நீனாக்கேணி ஆகிய பகுதிகளிலுள்ள காணி பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நேற்று ஆராயப்பட்டது. இதன்போதே மாகாண ஆளுநரை அடுத்த வாரம் சந்திப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதியின் விசேட செயலணி கூட்டத்தில் காணி அமைச்சர் கயந்த கருணாதிலக்கவும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்