ஹக்கீம், ரிசாத் புத்தள போராட்டத்தில் பங்குபற்றுவார்கள்..? மக்கள் எதிபார்ப்பு

குப்பைகளை புத்தளத்தில் கொட்டும் திட்டத்திற்கு எதிரஆக புத்தளத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் சத்தியாக்கிரக போராட்டத்தில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாத் பதியுதீன் ஆகியோர் நாளை வெள்ளிக்கிழமை அல்லது நாளை மறுதினம் சனிக்கிழமை பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Puttalam Human Development , Clean Puttalam அமைப்பினரோடு இணைந்து புத்தளத்தில் இயங்கும் ஏனைய தன்னார்வ தொண்டு அமைப்பினர்களும் இந்த குப்பைத் திட்டத்திற்கு எதிராக சுழற்சி முறையில் இரவு, பகலாக தொடர் சத்தியாக்கிரக போராட்டம் இன்று (04) ஆறாவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த போராட்டத்தில் புத்தளத்தில் வாழும் மூவின மக்களும், தன்னார்வ தொண்டு அமைப்பினரும், அரசியல் கட்சி பிரமுகர்களும் , பள்ளிவாசல்கள் நிர்வாகளும் சுழற்சி முறையில் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நாளை வெள்ளிக்கிழமை அல்லது நாளை மறுதினம் சனிக்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சர்களான ரிஷாத் பதியுதீன் உள்ளிட்ட இரண்டு கட்சிகளின் முக்கியஸ்தர்களும் குறித்த சத்தியாக்கிரக போராட்டத்தில் பங்கேற்று தங்களது எதிர்ப்புக்களை தெரிவிப்பார்கள் எனவும் ௯றப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...