"நீரில் விளைந்த உப்பு" நீரால்தான் கரைக்கப்பட வேண்டும்”

மரக் கட்சி மக்களால் புறக் கணிக்கப் பட்டு மக்கள் தங்கள் கையில் தீர்ப்பை எடுக்க வேண்டும்.கடந்த காலம்களில் மரக் கட்சி போக்குகளை நாம் அறிவோம்.பதவி பெறுவதுதான் இவர்களது பேரம் , மற்றும் படி இவர்களால் சமூகத்துக்கு சீர் அழிவே தவிரே வேறில்லை.
வெறும் போக்குக் காட்டி ,காலத்தை வீணடிப்பதும் , மற்றும் சமூகத்தை ஒரு குழப்பமான சூழ் நிலைக்கு கொண்டு சென்று கடைசி நேரத்தில் சவால்கள் விட்டு சமூகத்தின் வாக்குகளை அள்ளி தங்களுக்கு வாசியான பக்கம் இணைவதுதான் இவர்களது கடந்த கால செயல்களாக விளங்குகின்றன.
இக் கூத்துக்களால் பெரும் பான்மையும் , மற்றும் ஒரு சிறு பான்மையும் இவர்களை ஒரு வேற்றுக் கண் கொண்டு பார்க்கின்ற நிலமையினை உருவாக்கி உள்ளது.
உறுப்பினர்களுக்குள் குழப்பம் ,ஊருக்குள் குழப்பம் , இவர்கள் விடும் ஏறுக்கு மாறான அறிக்கைகளில் குழப்பம் இதனால் மக்களுக்குள் குழப்பம் இவை எல்லாவற்றையும் உண்டு பண்ணும் கட்சியாக மரக் கட்சி உருவெடுத்துள்ளது.
ஆதலால் இத் தேர்தலில் இவர்கள் ஆளும் கட்சியில் சேர்ந்தாலும் சரியே , அல்லது எதிர் அணியில் சேர்ந்தாலும் சரியே இவர்களை முற்றாக புறக் கணிக்கும் படி மக்களை தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி கேட்டுக் கொள்கின்றது.
(ஸ்தாபகர் முகைடீன் பாவா)
தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...