Oct 22, 2018

புத்­தளம் குப்பை பிரச்சினைக்கு தீர்வு இல்லையென்றால், தேர்தலில் ஆப்பு - மக்கள் பிரகடனம்


கொழும்பு குப்­பை­களை புத்­த­ளத்தில் கொட்டும் திட்­டத்­திற்கு எதிர்ப்புத் தெரி­வித்து வெள்­ளிக்­கி­ழமை இரவு கற்­பிட்­டியில் இடம்­பெற்ற விழிப்­பு­ணர்வு கூட்­டத்­தி­லேயே சந்­ததி காக்கும் சரித்­திர பிர­க­டனம் எனும் தொனிப்­பொ­ருளில் ஐந்து கோரிக்­கை­களை முன்­வைத்து இந்தப் பிர­க­டனம் செய்­யப்­பட்­டது. கற்­பிட்டி ஒன்­றி­ணைக்­கப்­பட்ட சிவில் சமூகம் ஏற்­பாடு செய்த இந்த விழிப்­பு­ணர்வு பொதுக்­கூட்­டத்தில் க்ளீன் புத்­தளம் அமைப்­பினர், சமயத் தலை­வர்கள், அர­சியல் பிர­மு­கர்கள் பொது மக்கள் என பெரும் எண்­ணிக்­கை­யி­லானோர் கலந்­து­கொண்­டனர்.

இதன்­போது நிகழ்வில் கலந்­து­கொண்ட அனை­வரும் எழுந்து நிற்க, கற்­பிட்­டியைச் சேர்ந்த அயாஷ்கான் ஆசி­ரி­ய­ரினால் இந்தப் பிர­க­டனம் வாசிக்­கப்­பட்­டது.

திண்மக் கழிவு முகா­மைத்­துவ திட்­ட­மா­னது எங்­க­ளது இருப்பின் மீதும், எதிர்­கால சந்­த­தி­யி­னரின் வள­மான வாழ்வின் மீதும், சுற்றுப் புறச் சூழல் மீதும் தொடுக்­கப்­பட்ட ஒரு உயி­ரியல் யுத்தம் என்­பதை இலங்கை ஜன­நா­யக சோஷ­லிச குடி­ய­ரசு மக்­க­ளா­கிய நாம் உளப்­பூர்­வ­மாக இன, மொழி, அர­சியல் பேதங்­க­ளுக்கு அப்பால் ஏற்­றுக்­கொள்­கிறோம். புத்­தளம் மக்­க­ளா­கிய நாம் எமது எதிர்­கால சந்­த­தி­யினர் நன்மை கரு­தியும், நாட்டின் நிலை­பே­றான அபி­வி­ருத்தி கொள்­கையை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கும் முக்­கிய தீர்­மா­னங்­களை இதன்­போது அறி­விக்­கின்றோம்.

புத்­தளம் மாவட்­டத்தின் அறு­வாக்­காட்டு திண்மக் கழிவு முகா­மைத்­துவ திட்­ட­மா­னது நிலை­யான அபி­வி­ருத்­திக்கும், சுற்­றுப்­புறச் சூழ­லுக்கும், நிகழ்­கால மற்றும் எதிர்­கால வாழ்­விற்கும் பாரிய சவா­லாக அமையும். அத்­துடன், தேசிய அர­சாங்கம் இந்த திட்­டத்தை உட­ன­டி­யாக நிறுத்த வேண்டும் என்று புத்­தளம் தேர்தல் தொகு­தியின் புத்­தளம் நகர சபை, வன்­னாத்­த­வில்லு பிர­தேச சபை, புத்­தளம் பிர­தேச சபை, கற்­பிட்டி பிர­தேச சபை ஆகிய நான்கு உள்­ளூ­ராட்சி மன்­றங்­களும் திட்­டத்­திற்கு எதி­ராக பிரே­ரணை நிறை­வேற்றி ஜனா­தி­ப­திக்கும், பிர­த­ம­ருக்கும், சர்­வ­தேச சமூ­கத்­திற்கும் அனுப்பி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்­கிறோம். அத்தோடு, புத்­த­ளத்தில் நேர­டி­யாக அல்­லது மறை­மு­க­மாக இருக்­கின்ற மக்கள் பிர­தி­நி­திகள், முன்னாள் மக்கள் பிர­தி­நி­திகள் அனை­வரும் இந்த அறு­வாக்­காட்டு குப்பைத் திட்­டத்­திற்கு எதி­ராக தங்­க­ளது நேர­டி­யான கருத்­துக்­களை கட்சி, அர­சியல் மற்றும் இன, மத, மொழி பேதங்­க­ளுக்கு அப்பால் எதிர்ப்­புக்­களை வெளிப்­ப­டுத்தி புத்­தளம் மக்­களின் எதிர்­கால நன்மை கருதி அதனை ஊடக அறிக்­கை­யாக வெளி­யிட வேண்டும் எனவும் பிர­க­டனம் செய்­கிறோம்.

இலங்கை ஜன­நா­யக சோஷ­லிசக் குடி­ய­ரசின் உண்­மை­யான குடி­மக்கள் என்ற ரீதி­யிலும், இந்த நல்­லாட்சி அரசை உரு­வாக்­கி­ய­வர்கள் என்ற ரீதி­யிலும் புத்­தளம் மக்­களின் எதிர்­கா­லத்தை கவ­னத்திற் கொண்டு இந்த திட்­டத்தை கைவி­டாது பட்­சத்தில் அதனை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதை வன்­மை­யாக கண்­டிப்­ப­துடன் எந்த அர­சியல் தலை­மை­க­ளுக்கும் ஆத­ர­வாக ஜனா­தி­பதி, பாரா­ளு­மன்றம் மற்றும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தல்­களில் எமது வாக்­கு­களை அளிக்­காமல் என்றும் எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­துவோம் என புத்­தளம் மக்­க­ளா­கிய நாங்கள் பிர­க­டனம் செய்­கிறோம். புத்­த­ளத்தில் சீமெந்து, அனல் மின்­சாரம் ஆகிய திட்­டங்­க­ளினால் சூழல், சுகா­தார மற்றும் பொரு­ளா­தார ரீதி­யாக உருக்­கு­ளைந்து போகின்றோம். எனவே இவை தொடர்­பாக உட­ன­டி­யாக விசா­ரணை செய்து மக்­க­ளுக்கு ஏற்­பட்ட அநீதி தொடர்பாக அரசுக்கு உரிய முறையில் ஆவணம் செய்யக் கூடிய சுயாதீனமாக இயங்கும் ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும் எனவும் ஆணைக்குழு ஊடாக எங்களது பிரதிநிதிகளும் செயற்பட்டு உண்மையான தீர்வுப் பொதியொன்று எங்களுடைய மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் நாம் பிரகடனம் செய்கிறோம் என வாசிக்கப்பட்ட போது அனைவரும் கைகளை உயர்த்தி பிரகடனத்தை ஏற்றுக்கொண்டனர்.

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network